இந்த வரவுசெலவுத்திட்டத்தில், சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகைகளைக் கொள்வனவு செய்வதற்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்
11 0

Posted by  in Latest News

அரசாங்கக் கட்டிடங்கள் அனைத்திற்கும் சூரிய சக்தி மின்சாரம்

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் அவர்கள்

‘நேற்றைய தினம் முன்வைக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவிலிருந்து, மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சு என்ற ரீதியில், எதிர்காலத்தில் நாம் ஒட்டுமொத்தமாக முன்னெடுப்பதற்கு குறித்த சூரிய பளசங்கிராமயத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். எங்களுடைய ஆயத்தம் என்னவெள்றால் பத்து இலட்சம் வீடுகளை சூரிய சக்தி மின்னுற்பத்தி வசதிகளாக ஆக்குவதாகும். அதன் நிமித்தம் மின்சார நுகர்வோருக்கு சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகைகளைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் வங்கிக் கடனுக்கான வட்டிற்கு ஏதாவதொரு சலுகையைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகும். அதன் பிரகாரம், வட்டி சலுகையின் நிமித்தம் இந்த வரவசெலவுத்திட்டத்தினுள் ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அனைத்து அரசாங்கக் கட்டிடங்களுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகைகளை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் நிமித்தமும், ஆரம்ப கட்டமாக 350 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திலிருந்து மீளப்புதுப்பிக்கத்தகு சக்திகளை அதிகரித்துக்கொள்வது தொடர்பான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி தொடர்பிலும் மற்றும் எங்களது பிரேரணைகளை ஏற்றுக் கொண்டமை தொடர்பிலும் ஒரு அமைச்சு என்ற ரீதியில் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்’ எனக் குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required