இந்த ஆண்டு இறுதியளவில் முழு நாடும் 100% வீத மின்சாரத்தினால் பூர்த்தி அடையும். ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற தேசிய கருமப்பணி – 2016.12.31
08 0

Posted by  in Latest News

மின்சார சபை என்பது ஒரு வர்த்தக நிறுவனமாகும். எனினும், நாம் வர்த்தக நோக்கத்திலன்றி சமூகக் கருமப்பணி, மனிதாபிமானம் என்ற அடிப்படையில்தான் ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற தேசிய கருமப் பணித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். 2016.12.31 ஆம் திகதியளவில் இந்த மின்சாரக் கருமப்பணித் திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம். இது வரை இந்தக் கருத்திட்டத்திலிருந்து பயன் பெறாத எவரும் இருப்பின் இதிலிருந்து பயனைப் பெற்றுக் கொள்ளுமாறு நாம் பொது மக்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம்’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும் என்ற சமூகக் கருமப்பணி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் இன்று (08) ஆம் திகதி மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சில் நடைபெற்ற முற்போக்கு மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது அமைச்சர் அவர்கள் இவ்வாறு கருத்துத் தொிவித்தார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தொிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்…

‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற தேசிய மின்சாரக் கருமப்பணி நிகழ்ச்சித்திட்டத்தை பல சவால்களுக்கு மத்தியில் இத்தகைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு பிரதி அமைச்சர் அடங்கலாக அனைத்து ஊழியர்களும் பெருமளவில் முற்சித்தனர். இந்தக் கருத்திட்டத்தை ஆரம்பித்த நேரத்தில், இந்த நாட்டில் மின்சாரமில்லாத 260993 வீடுகள் இருந்தன. இவற்றில் 224828 வீடுகளுக்கு எம்மால் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது. இங்குள்ள முக்கியமான ஒரு விடயம் யாதெனில் ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் அண்ணளவாக 5 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இன்று குப்பி விளக்குகளை எடுத்தெறிந்து மின்சார ஒளியில் தமது பாடங்களைக் கற்கின்றனர். இந்தத் தேசிய மின்சார தேசிய கருமப்பணி என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் இதன் நிமித்தம் பெரும் உறுதுணையாக இருந்த அதே வேளை அரசாங்கமும் எமக்கு வலுவூட்டியது. ஒரு நாடு என்ற ரீதியில், மின்சார விநியோகத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத 19241 வீடுகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினை தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி தீர்வுகாண முயற்சிக்கின்றோம். 10 – 15 வருடங்களாக மின்கம்பங்களையும், மின் கம்பிகளையும் கண்டுவந்தும் கூட மின்சாரமில்லாத ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் அவ்வாறு மின்சாரம் இல்லாமலிருந்தற்குக் காரணம் பொருளாதாரப் பிரச்சினைதான். அதே போன்று பொருளாதார கஷ்டங்களினால் அவதிப்பட்ட சமூகத்தில் உதவி வழங்கப்பட வேண்டிய பிரிவினர்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தினோம்’ எனவும் குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required