அம்பாறை மாவட்டத்தில் 100% மின்சார வசதியைப் பூர்த்தி செய்ய இன்று எம்மால் முடிந்துள்ளது
31 0

Posted by  in Latest News

அம்பாறை மாவட்டத்தில் 11438 குடும்பங்களுக்கு புதிய அரசாங்கத்தின் கீழ் மின்சாரத்தை வழங்குதல்
பொல்லேபெத்த ஆதிவாசிகளுக்கு வயல் காணிகளை வழங்கதல்
‘மின்வலு சக்தி அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு 03 முக்கிய கருமங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவைதான் மின்சார உற்பத்தி, மின்சார செலுத்துகை மற்றும் மின்சாரப் பகிர்ந்தளிப்பு. கடந்த நாட்களில், தொழில்நுட்பப் பிரச்சினையின் காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஒரேதடவையில் மின்சாரம் தடைப்பட்டது. எனினும், இலங்கை மின்சார சபையின் உயர் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையான ஊழியர்களின் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பினால் அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார முறிவு நிலையை மீள்நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. நாம் இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்சாரத்தை வழங்க வேண்டியிருந்தோம். நான் மின்சார அமைச்சராகப் பதவியேற்ற போது 247920 குடும்பங்களுக்கு மின்சார வசதியிருக்கவில்லை. அந்தக் குடும்பங்களில் தற்பொழுது 178470 குடும்பங்களுக்கு நான் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளேன். அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் மின்சார வசதியில்லாத 11438 குடும்பங்கள் இருந்தன. மின்சாரமில்லாமலிருந்த அந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்சாரத்தை வழங்கி, இன்று நாம் அம்பாறை மாவட்டத்தில் கடைசி வீட்டிற்கு மின்சாரத்தை வழங்குகின்றோம்’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முழு நாட்டிலும் மாவட்ட மட்டத்தில் மின்சார ஒன்றிணைப்புக் கருத்திட்டத்தின் கீழ் 100% மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நேற்று (30) அம்பாறை மாவட்டத்தின் பொல்லேபெத்த ஆதிவாசிகள் கிராமத்தின் ஆதிவாசிகளின் தலைவரது வீட்டிற்கு மின்சாரத்தை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வேளையில் அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்…..

‘02 பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதால் இன்று முன்னரைப் பார்க்கிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பது இலகுவாகும். இன்று ஒரு வேலையைச் செய்தால் முன்னர் போல் குறை தேடுவதில்லை. இரண்டு கட்சிகளுமே இணைந்து பிரச்சினைகளைத் தீர்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. அம்பாறை மாவட்ட மக்களுக்கு வயல் காணிகளைப் பெற்றுக் கொடுக்கும் கருத்திட்டத்திற்கு உதவியாகவிருந்து, இந்தப் பிரதேச மக்கள் மிகவும் சமாதானமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழுவதை மீண்டும் பார்ப்பதற்கு இந்தப் பிரதேசத்திற்கு வர தான் எதிர்பார்ப்பதாகவும்’ குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required