நாட்டின் மின்சார நுகர்வோரை மின்சார உற்பத்தியாளர்களாக ஆக்கும் நிமித்தம் செயற்படுத்தப்படும் ‘சூரிய பள சங்கிராமய’
20 0

Posted by  in Latest News

  • பத்து இலட்சம் வீடுகளில் சூரிய சக்திப் பலகை மைய மின்சார உற்பத்தியை ஊக்குவித்தல்

பின்னணி
மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களை பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பில் அரச துறையினதும் தனியார் துறையினதும் முதலீட்டுத் தரப்புகள் பெரும் கவனம் செலுத்தியுள்ளன. தற்பொழுது நாட்டில் காணப்படுகின்ற மின்னற்பத்திக் கொள்திறனாகிய ஏறக்குறைய 3,950 மெ.வொ. அளவான கொள்திறன், வருடாந்தம் 7‍% வீத அளவினாலாவது அதிகரிக்குமாயின், 2025 ஆம் ஆண்டளவில் மேலும் சுமார் 3,000 மெ.வொ. அளவான மின்சாரத்தை புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி நோிடும். இதன்படி, 2025 ஆம் ஆண்டளவில் புதிதாக உற்பத்தி செய்யவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சுமார் 3,000 மெ.வொ. மின்னுற்பத்திக் கொள்திறனில் கணிசமான அளவை மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கை யாதெனில், தற்பொழுது மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற 50‍% வீதமான மின்சாரத்தை 2020 ஆம் ஆண்டளவில் ஏறக்குறைய 60% வீதம் வரையும், 2030 ஆம் ஆண்டளவில் அதனை ஏறக்குறைய 70‍% வீதம் வரையும் அதிகரித்து, 2050 ஆம் ஆண்டில், நாட்டிற்குத் தேவையான முழு மின்சக்தி அளவையும் சுதேசிய சக்தி மூலங்களையும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களையும் பயன்படுத்தி உற்பத்தி செய்வதாகும். இலங்கையை மின்சாரத்தில் தன்னிறைவு அடையச் செய்யும் எதிர்பார்ப்புகள் மின்சக்தியில் வலுப்பெற்ற ஒரு தேசம் – ஒரு அறிவு மையப் பொருளாதாரம்ஆகியவற்றுக்கான 2015-2025 இலங்கை மின்சக்தி அபிவிருத்தித் திட்டத்தின்சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
இன்றைய அரசாங்கம் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களினூடாக மின்சாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான விஷேட கவனத்தை செலுத்தியுள்ளது. குறிப்பாக, எதிர்காலத்தில், அதிகளவான காற்று சக்தி மூல மின்னுற்பத்தி நிலையங்களையும், சூரிய சக்தி மூல மின்னுற்பத்தி நிலையங்களையும், உயிரணுத்திணிவுச் சக்தி மூல மின்னுற்பத்தி நிலையங்களையும் நிர்மாணிப்பதனூடாக இலங்கையின் சக்தித் துறையை பல்லினப்படுத்துவதற்குத் தேவையான திட்டங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 10 ஆண்டுகளினுள் சுமார் 600 மெ.வொ. மின்சக்திக் கொள்திறனுடைய காற்று சக்தி மூல மின்னுற்பத்தி நிலையத்தையும், சுமார் 3,000 மெ.வொ. மின்சக்திக் கொள்திறனுடைய மின்னுற்பத்தி நிலையத்தையும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விஷேடாக, சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தனியார் துறைத் தரப்புகள் விருப்பத்தைத் தொிவித்துள்ளன. எனினும், இது வரை மின்சார முறைமைக்கு சோ்க்கப்பட்டிருப்பது சுமார் 1.5 அளவான சூரிய சக்தி மூல மின்சக்திக் கொள்திறன் மாத்திரமேயாகும். இது தவிர, ஏறத்தாழ 30 மெ.வொ. அளவு, தேறிய மாணிவாசிப்பு (Net Metering) முறையியலின் கீழ் (வீட்டுக் கூரைகளில் நிறுவப்படும் சூரிய சக்திப் பலகைள் – Rooftop Solar Panel) அடையப்பட்டுள்ளது.
மேற்குறித்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு மின்சார முறைமைக்கு சோ்க்க கூடிய வாய்ப்பை அளிப்பதற்காக, சூரிய பள சங்கிராமய என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒழுங்குகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சூரிய பள சங்கிராமயநிகழ்ச்சித்திட்டம்
சூரிய சக்தியை பயன்படுத்தி , நுகர்வோருக்கு அவர்களின் வீட்டுக் கூரைகளில்/வளாகங்களில் சூரிய சக்திப் பலகைகைகளை நிறுவி, மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சார முறைமைக்கு சோ்க்கும் வகையில் அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசித்த சூரிய பள சங்கிராமய என்ற நிகழ்ச்சித்திட்டம், சன சமூக மின்னுற்பத்திக் கருத் திட்டம் என்ற அடிப்படையில் கீழ்காணும் மூன்று விதங்களில் செயற்படுத்தப்படுகின்றது. எந்த ஒரு மின்சார நுகர்பவருக்கும் தனது விருப்பத்தின் போில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று விதங்களில், ஒரு விதத்தைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இதன் போது, ஆகக்கூடிய நிலையான சக்திக் கொள்திறன் உரிய மின்சார நுகர்பவரின் மின்சாரத்திற்கான கேள்விக்கு (Contract Demand) மட்டுப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணையும் மின்சார நுகர்வோருடன் 20 ஆண்டுகள் வரையான காலப் பகுதிக்கு, சூரிய சக்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை மின்சார முறைமைக்கு இணைக்கும் வகையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

1. தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற தேறிய மாணிவாசிப்பு (Net Metering) முறையின் கீழ், மின்சாரத்தை நுகரும் எவரேனும் ஒருவருக்கு, தனது வீட்டுக் கூரையில்/ வளாத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்திப் பலகையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுக்கும் மற்றும் நுகரப்படும் மின்சார அலகுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசத்திற்கு மாத்திரம் மின்சார நுகர்வு கட்டணங்களை செலுத்துதல். இங்கு, உரிய மின்சார நுகர்பவரின் மின்னுற்பத்தி, நுகர்வுக்கு அதிகமாக இருக்குமானால், அந்த மின்சார அலகுகளை எதிர்வரும் மாதங்களில் நுகர்ந்து கொள்ளலாம். மேலதிகமாக இருக்கின்ற மின்சாரத்திற்கு விலையேதும் செலுத்தப்பட மாட்டாது. இந்த மேலதிக மின்சார அலகுகளை 10 வருட காலத்திற்குள் உரிய மின்சார நுகர்பவருக்கு பாவிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2. மின்சார நுகர்பவர் ஒருவர் தனது வீட்டுக் கூரையில் நிறுவப்படும் சூரிய சக்திப் பலகையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுகளின் எண்ணிக்கை அவரினால் நுகரப்படும் மின்சார அலகுகளை விடவும் அதிகமாக இருக்குமாயின், மேலதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சார அலகுகளுக்கு முதல் 7 வருட காலப் பகுதியில் ஒரு மின்சார அலகுக்கு 22.00 ரூபாவையும் மற்றும் எட்டாவது வருடத்திலிருந்து ஒரு அலகுக்கு 15.50 ரூபாவையும் செலுத்துதல். ஏதாவது ஒரு விதத்தில் நுகரப்படும் மின்சார அலகுகளின் எண்ணிக்கை மின்னுற்பத்தி அலகுகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருக்குமானால், தற்போதுள்ள மின்சாரக் கட்டணங்களின் பிரகாரம், நுகர்பவரினால் மேலதிகமாக நுகரப்படும் மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கு கொப்பனவை செலுத்துதல் (Net Accounting).

3. தனது வீட்டுக் கூரையில் நிறுவக்கூடிய சூரிய சக்திப் பலகையிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் மின்சார அலகுக்கு கட்டணத்தை செலுத்துதல். இங்கு, தூய மாணிவாசிப்பு முறையியலின் கீழ் மாத்திரமன்றி மின்சார நுகர்பவரினதும் மின்சார உற்பத்தி மின்சார நுகர்விலிருந்து விலக்களிக்கப்படும். அதன் பிரகாரம், மின்சார நுகர்பவர் தனது மின்சார நுகர்வுக்காக காணப்படுகின்ற கட்டண முறையின் கீழ் மின்சார நுகர்வு சார்ந்த கட்டணங்களை செலுத்த வேண்டும். இவரின் மொத்த மின்சார உற்பத்திற்கும் கட்டணங்களை இலங்கை மின்சார சபை செலுத்தும் (Net Plus).

தற்பொழுது செயற்படுத்தப்பட்டு வருகின்ற தேறிய மாணிவாசிப்பு முறையானது 200 அலகுக்கு அதிகமான மின்சார அலகுகளை நுகரும் எந்த ஒரு மின்சார நுகர்பவருக்கும் நன்மை அளிக்கக் கூடியதாக அமையும். இரண்டாவது விதத்தைக் கருத்திற் கொள்ளுகின்ற போது, அது 120 மின்சார அலகுகளுக்கு அதிகமான மின்சார அலகுகளை நுகரும் ஒரு மின்சார நுகபவருக்கு நன்மை அளிக்கக் கூடியதாக அமையும். எனினும், மூன்றாவது விதம் எந்த ஒரு மின்சார நுகர்பவருக்கும் நன்மை அளிக்கக் கூடியது என்பது இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்விலிருந்து தொிய வருகின்றது. ஆகையால், இந்த மூன்று விதமான முறையியல்களையும் மின்சார நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் விருப்பம் மற்றும் மிகவும் நன்மை அளிக்கக் கூடியது என்ற விடயங்களின் அடிப்படையில் ஒரு விதத்தை தோ்ந்தெடுப்பதற்கு இடமளிப்பது செயல்முறை சாத்தியமாக அமையும்.
2010 ஆம் ஆண்டு முதல் செற்படுத்தப்பட்டு வந்த வீட்டுக் கூரைகளில் நிறுவக் கூடிய தேறிய மாணிவாசிப்பு (Net Metering) முறைமையை நிறுவும் சிறிய சூரிய சக்தி மின்னுற்பத்திக் கருத் திட்டம் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் அடையவில்லை. அது பிரபல்லியம் அடைந்திருப்பது அதிகளவில் மின்சாரத்தை நுகர்கின்ற மின்சார நுகர்வோருக்கு மத்தியில் மாத்திரமாகும். எனினும், வீட்டுக் கூரையில் நிறுவக் கூடிய சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமையினூடாக அதிகமான நன்மைகள் கிடைப்பதாக இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து பதிவாகியுள்ளது. இவற்றுக்கு இடையில் கீழ்காணும் பொருளாதார, சுற்றாடல் சமூக ரீதியான நன்மைகளை விஷேடமாக அடைந்து கொள்ள முடியும்.

1. வீட்டுக் கூரையில் நிறுவக் கூடிய சிறிய சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகை முறைமைகள் நாடு முழுதிலும் பரந்து காணப்படுவதால், அது மின்சார முறைமையின் சமநிலைக்கு இன்றியமையாதாக விளங்கும்.

2. மின்சார நுகர்பவரின் வீட்டுக்கு அருகில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், மின்சாரத்தை பகிர்ந்தளித்தல், மின்சாரத்தை செலுத்துதல் ஆகிய நடவடிக்கைகளின் போது நிகழும் மின்சார வீணாதல் அளவு குறையும்.

3. தற்பொழுது பாரியளவான தொழில் முயற்சியாளர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுள்ள மின்சார உற்பத்தியில் சிறிய அளவான தொழில் முயற்சியாளர்களும் இணைந்து கொள்ளலாம்.

4. நாட்டின் மின்சார நுகர்வோர் மின்சார உற்பத்தியாளர்களாக மாறுவதால் அவர்களின் பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும்.

5. நாடு முழுதிலும் பரந்தளவில் சிறிய அளவிலான மின்னுற்பத்தி நிலைய முறைமை காணப்படுவதால் அது தேசிய மின் சக்தியின் பாதுகாப்புக்கும் சாதகமான அளவில் பயனளிக்கும்.

6. சூரிய சக்தி இலவசமாகக் கிடைக்கின்ற ஒரு சக்தி மூலம் என்பதால் மின்சக்திற்காக (எரிபொருள், நிலக் கரி என்பன) தற்பொழுது செலவிடப்படுகின்ற அந்நிய செலாவணியின் அளவை குறைத்துக் கொள்ள முடியும்.

7. நுகர்வோரில் அதிகமானோர் மின்னுற்பத்தியாளர்களாக மாறுவதால் மின்சார உற்பத்தியிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தினுள் நாட்டின் வருமான ஏற்றத்தாழ்வு குறைவடையும்.

8. 2020 ஆம் ஆண்டளவில் ஏறக்குறைய 200 மெ.வொ. அளவான மின்சாரத்தை மின்சார முறைமைக்கு சோ்க்க முடியும் என்பதால் 2025 ஆம் ஆண்டளவில் மேலும் சுமார் 800 மெ.வொ. அளவான மின்சாரத்தை மின்சார முறைமைக்கு சோ்த்துக் கொள்ள முடியும்.

9. அனல் சக்தி மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் காரணத்தினால், வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் காபனீர் ஒட்சைட்டு (Co2) அளவை, 150,000 மெ.டொ. என்ற அளவினால் குறைத்துக் கொள்ள முடியும்.

10. இந்த முறையியலின் கீழ் மின்சார முறைமையில் இணையும் ஒவ்வொரு மின்சார நுகர்பவருக்கும் கடன் தொகை மற்றும் வட்டித் தவணைக் கட்டணங்கள், மின்சாரக் கட்டணங்கள் என்பவற்றை செலுத்தியதன் பின்னர், 07 வருட கால அளவில் ரூ.300/- அளவான மாதாந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 08-வது வருடத்திலிருந்து 20-வது வருடம் வரை ரூ. 2,500/- ரூபா தொகைக்கு அதிகாமான ஒரு மாதாந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

11. இந்தத் துறையில் எற்படுகின்ற மறுமலர்ச்சியினூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகளவான தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

எந்த ஒரு மின்சார நுகர்பவருக்கும் தனது வீட்டு கூரையில் நிறுவக் கூடிய சூரிய சக்திப் பலகைகளுக்கான முதலீடுகளிலிருந்து, முதலாவது 07 வருட காலத்தினுள், இந்த சூரிய சக்திப் பலகையை நிறுவதற்கான மூலதனத்தை ஏற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட நிதித் தொகையை தவணைக் கட்டண அடிப்படையில் செலுத்த நோிடுவதால், உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சார உற்பத்தி அலகுக்கான அதிக கட்டணமும் 08 முதல் 20 வருட காலப் பகுதிக்கு மின்சார நுகர்பவர் முதலீடு செய்த முதலீட்டிற்கான நியாயமான பிரதிபலன் அடங்கலாக உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சார அலகை கொள்வனவு செய்யும் நிமித்தம் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கீழ்காணும் விதத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

கருத்திட்டத்தின் காலம் (ஆண்டு) மின்சார அலகுக்கு செலுத்தப்படும் தொகை (ரூ.)
படிமுறை I (Tier I)

1-7

22.00/kWh

படிமுறை II (Tier II)

8-20

15.50/kWh

(2.1 அட்டவணை)

இதன்படி எந்த ஒரு மின்சார நுகர்பவரும் 1kW உடைய சூரிய சக்திப் பலகையை தனது வீட்டு கூரையில் நிறுவுவாரானால், அவருக்கு 115-120 மின்சார அலகுகளுக்கு இடைப்பட்ட அளவான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆதலால் இவருக்கு மாதந்தம் ஏறக்குறைய ரூ.2,500/- முதல் ரூ.2,700/- வரையான அளவில் வருமானம் கிடைக்கும். தற்பொழுது இலங்கையில் இயங்குகின்ற அரச மற்றும் தனியார் துறைகளின் வர்த்தக வங்கிகள் பலவற்றிலிருந்தும் தேறிய மாணிவாசிப்பு கருவி முறைமையை கொள்வனவு செய்யும் பொருட்டு சலுகை அடிப்படையில் கடன் வழங்கப்படுகின்றது. 5 முதல் 7 வரையான ஆண்டு காலப் பகுதிற்குள் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றுக் கொடுக்கப்படும் இந்தக் கடன் தொகையை, குறித்த முறைமையை நிறுவுவதற்கு செலவாகும் தொகையில் 75% வீதம் வரை பெற்றுக் கொள்ள முடியும்.
இங்கு மின்சார நுகர்பவர் எவரேனும் ஒருவர் கடன் தொகையை பெற்று, இந்தக் கருத் திட்டத்தை செயற்படுத்துவராயின், பெற்ற அந்த கடன் தொடர்பில் 13% வீத உச்ச அளவான வட்டியுடன் 07 ஆண்டு காலத்திற்குள் மீளச் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையை கருத்திற் கொள்ளும் போது, மாதாந்தம் ரூ.2,200/- தொகையை ஒரு கடன் தவணைக் கட்டணமாக செலுத்த நோிடும். இதன்படி, இந்த முறையியலின் கீழ் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற மின்சார நுகர்வோருக்கு மாதாந்தம் ஆகக் குறைந்தது சுமார் ரூ.300/- தொகையான ஒரு வருமானம், கடன் தொகையையும், வட்டித் தவணைக் கட்டணத்தையும், மின்சார நுகர்வு கட்டணத்தையும் செலுத்தியன் பின்னர் எஞ்சியிருக்கும். இந்த வருமான நிலை, பெற்றுக் கொள்ளப்படும் கடன் தொகை தொடர்பான நிபந்தனைகளின் அடிப்படையில் இன்னும் சலுகையாக அமைவதால் மேலும் உயர்வடையும்.
அதே போன்று, கடன் தவணைக் கட்டணம் செலுத்தி முடிக்கப்படும் 07 ஆண்டுகளின் பின்னர் அவர்களுக்கு கிடைக்கும் தொகையை முற்றிலும் வருமானமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 2,500/- முதல் ரூ. 2,700/- என்ற அளவில் 20 ஆண்டுகள் வரையான காலப் பகுதிக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த முழு மொத்த இலாபத்தை கருத்திற் கொண்டு, மின்சார நுகர்வோரின் வீட்டு கூரைகளில் நிறுவப்படும் 1,000,000 சூரிய சக்திப் பலகைகளை (Rooftop Solar) நிறுவி, எதிர்வரும் 10 ஆண்டுகளினுள் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றாக அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து எதிர்பார்ப்பது யாதெனில், நாட்டின் முழு மொத்த நுகர்வோர்களில் ஆகக் குறைந்தது 20% வீதமான நுகர்வோரையாவது மின்சார உற்பத்தியாளர்களாக மாற்றுவதாகும். தற்பொழுது, இந்த சூரிய சக்திப் பலகைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் முறைமை உயர்ந்த வருமானம் பெறுகின்ற தரப்புகளுக்கும் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வகுப்பினருக்கும் இடையில் மாத்திரமே செயற்படுத்தப்படுகின்றது. இதற்கு காரணம், தற்பொழுது செயற்படுத்தப்படுகின்ற முறையியலினுள் வீடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற மேலதிக மின்சாரத்திற்கு, இலங்கை மின்சார சபையின் மூலம் விலை செலுத்தப்படாமலிருப்பதாகும். இதனால், குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற மின்சார நுகர்வோரை சூரிய சக்திப் பலகைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யச் செய்யும் வகையில் கவர்ந்தெடுப்பது கடினமான விடயமாகும். அமைச்சின் நோக்கம் யாதெனில், உத்தேசிக்கப்பட்டுள்ள 1,000,000 சூரிய சக்திப் பலகை மைய மின்னுற்பத்திகளில் ஆகக் குறைந்த 20% வீதத்தையாவது குறைந்த வருமானத்தைப் பெறுகின்றவர்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்துவதாகும். இதன் பிரகாரம், இதன் மூலம், குறைந்த வருமானத்தை பெறுகின்ற 02 இலட்சம் குடும்பங்கள், புதிய முறையியலின் கீழ், மின்சார உற்பத்தியாளர்களாக மாறுவார்கள். அந்த நோக்கத்துடன், வீடுகளினுள் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான கட்டண (Tariff) அடிப்படையில் மேலே காணப்படும் 2.1 ஆம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கொடுப்பனவை செலுத்துவதனூடாக இந்த மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உத்தேச கருத் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டளவில், 200 மெ.வொ. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், 2025 ஆம் ஆண்டளவில், அதனை 1,000 மெ.வொ. வரை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment

* required