நுரைச்சோலை லக்விஜய அனல் சக்தி மின்னுற்பத்தி நிலையம் இயங்காமையினால் மின்னுற்பத்தி வரையறையினுள் மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்தல்.
17 0

Posted by  in Latest News

2016.10.15 ஆம் ஆண்டு காலை 10.46 மணிக்கு மின்சார செலுத்துகை மார்க்கங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப முறிவுகளினால் நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி நிலையம் இயங்காமையின் காரணமாக ஏற்கெனவே அதன் மின்னுற்பத்தி மட்டுப்பட்டுள்ளது.
இந்த நிலைமயில் மின்னுற்பத்தி முறைமையின் மின்னுற்பத்திக் கொள்திறன் 900 மெ.வொ. அளவினால் குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஏனைய அனல் மின்னுற்பத்தி நிலையங்களையும் நீர் மின்னுற்பத்தி நிலையங்களையும் உச்சளவில் பயன்படுத்தி, தற்பொழுது மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்பொழுது நிலவுகின்ற மின்சாரத்திற்கான அதிக கேள்வியின் காரணமாக குறிப்பிட்டவொரு காலப் பகுதிக்கு மின்சார விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ் 2016.10.17 ஆம் திகதி முதல் 2016.10.21 ஆம் திகதி வரை காலையில் 2 ½ மணித்தியாலத்திற்கும் மற்றும் இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலத்திற்கும் என மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்த நோ்ந்துள்ளது.
இந்த மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்தல் கொழும்பு நகர எல்லைக்கும், வைத்தியசாலைகளுக்கும் மற்றும் கைத்தொழில் வலயங்களுக்கும் ஏற்புடையதாகாது. எனினும், இந்த நிலையில் மின்னுற்பத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில் மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்தும் காலத்தில் மின்சாரத்திற்கான தேவையை குறைத்துக் கொள்ள முடியுமாகவிருந்தால், மேலும் குறைத்துக் கொள்ள முடியும்.
ஆகையால், இந்த சந்தர்ப்பத்தில், மின்சார நுகர்வோரிடம், நாம் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் பாவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு சிக்கனமாக மின்சாரத்தைப் பாவித்து, மின்சாரத்திற்கான தேவையைக் குறைத்துக் கொள்ள முடியுமாயின் இந்த மின்சார விநியோக மட்டுப்படுத்தல் காலத்தை மேலும் குறைத்துக் கொள்ளலாம். அதே நேரம் இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரிகத்திற்கு, மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சு என்ற ரீதியில் எமது கவலையைத் தொிவித்துக் கொள்கின்றோம்.

பகல் நேரம்
A வகுதி                           B வகுதி                              C வகுதி                                D வகுதி
8.00– 10.30 மணி           10.00– 13.00 மணி           13.00– 15.30 மணி             15.30– 18.00 மணி

இரவு நேரம்
A வகுதி                            B வகுதி                            C வகுதி                                    D வகுதி
18.00– 19.00 மணி         19.00– 20.00 மணி 20.00– 21.00 மணி                         21.00– 22.00 மணி

(மேற்குறித்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வகுதிகள் மற்றும் அந்த வகுதிகளுக்குரிய பிரதேசங்கள் என்பன தொடர்பான விபரங்கள் PowerCut2016_Area_List_Final- என்ற எக்ஷெல் கோவையில் தனித்தனியாக பக்கங்கங்களில் தரப்பட்டுள்ளன)

PowerCut2016_Area_List_Final

Leave a comment

* required