Posted by superadmin in Latest News
· இலங்கை மின்சார சபையில் இணைந்து பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணி வாசிப்பாளர்கள் ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி முதல் செயல் வலுப் பெறும் வகையில் இ.மி.ச. நிரந்தர ஆளணிக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பற்றிய அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்….
‘ஊழியர் படைக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆயிரக் கணக்கான ஊழியர்கள் இலங்கை மின்சார சபையில் கடும் பிரச்சினைக்குரியவர்களாகக் காணப்பட்டனர். தான் ஆட்சிக்கு வந்தால் அந்த ஊழியர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பேன் என மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் ஒரு உறுதி மொழியை வழங்கினார்கள். அந்த நேரத்தில், ஏறக்குறைய 4956 ஊழியர்கள் இலங்கை மின்சார சபைக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். இந்த ஊழியர்களில் 2367 ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ஆம் திகதி நாம் நிரந்தர நியமங்களை வழங்கினோம். அந்த தஊழியர்களில் இன்னும் 2594 ஊழியர்கள் எஞ்சியிருக்கின்றனர். அதே போன்று ஏறக்குறைய 1400 மாணி வாசிப்பாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் சேவைக்கு ஆட்சேர்த்துக் கொள்ளப்பட்ட, குறித்த ஒரு காலம் பணியாற்றிய இந்த மாணி வாசிப்பாளர்கள் மற்றும் இ.மி.ச. சபையில் இணைந்து சேவையை வழங்கிய ஊழியர்கள் ஆகிய அனைவரையும் இந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இலங்கை மின்சார சபையின் நிரந்தர ஊழியர் படையில் சேர்த்துக் கொள்ள நாம் தயாராகவுள்ளோம். இதனை இது வரை இலங்கை மின்சார சபையில் காணப்பட்ட விஷேடமான மனித வளம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு ஒரு தீர்வாக நான் கருதுகின்றேன்’ எனவும் குறிப்பிட்டார்கள்.