26 0

Posted by  in Latest News

நிலவிய கடும் வரட்சியினால் உரிய காலத்தில் மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களுக்கு நீர் கிடைக்கவில்லை. ஆகையால் மழை வேண்டி, மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பற்றிய அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் கடந்த தினத்தன்று ஜய ஸ்ரீ மகா போதி வஹங்சவுக்கு ஒரு நேர்த்திக் கடனை வைத்தார்கள். உரிய காலத்தில் மழை நீர் கிடைத்து மின்னுற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள பிரதேச நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்தது. ஆதலால் தான் வைத்த நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு அமைச்சர் அவர்கள் அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதி வஹங்சவை வணங்கி வழிபட்டார். மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களிலுள்ள 07 நீர்த்துக்கங்களுக்கு நீர் கிடைத்தது. அதனை நினைவுகூர்ந்து தான் வைத்த நேர்த்தி கடனை நிறைவேற்றுவதற்காக ஜய ஸ்ரீ மகா போதிக்குச் சென்று அமைச்சர் அவர்கள் வழிபடுவதை இங்குள்ள புகைப்படத்தில் காணலாம்.