26 0

Posted by  in Latest News

கடந்த ஆண்டு நான் இந்த அமைச்சைப் பொறுப்பேற்ற நேரத்தில், மின்வலு சக்தி அமைச்சு என்பது பிரச்சினைகள் நிறைந்திருந்த ஒரு அமைச்சாகும். கடந்த மார்ச்சு மாதத்தில் அந்த பிரச்சினைகள் கட்டவிழ்க்கப்பட்டன. எல்லா பிரச்சினைகளும் ஒரே தடவையில் வெளியாகின. மழை வீழ்ச்சி குறைவினால் எமது நீர்வலு மின்சார உற்பத்தி குறைவடைந்தது. மின்சார செலுத்துகை முறைமையில் பிரச்சினைகள் காணப்பட்டது போல், மின்சாரப் பகிர்ந்தளிப்பிலும் பிரச்சினைகள் எழுந்தன. அதே போன்று நாட்டின் மின்சாரத்திற்கான தேவை 10% – 15% வீதங்களினால் அதிகரித்தது. வெப்பநிலை அதிகரித்ததால், குறுங்கால, நடுத்தர கால தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்த்து வைத்தோம். அந்தப் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்த்து வைத்து நீண்ட கால பரிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதையே நாம் இன்று செய்து வருகின்றோம். மழை கிடைக்காத சந்தர்ப்பங்களில், வழக்கமாக ஜய ஸ்ரீ மகா போதி வஹங்சவுக்கு நேர்த்திக் கடன்களை வைத்தோம். அந்த நேர்த்திக் கடனை வைத்து இரண்டு வாரங்களில் எமக்கு மழை கிடைத்தது. இன்று காலையில் நாம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றினோம். அந்த விதத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளைக் கண்டு வருகின்றோம். நீர் இல்லாத காலத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது எப்படி, அதற்குப் பொருத்தமான சக்தி மூலம் எது, குறைந்த சுற்றாடல் பாதிப்புகளுடைய சக்தி மூலம் எது, இவற்றையெல்லாம் பார்க்கிலும், நுகர்வோரின் கைக்கு இலாபத்தைக் கிடைக்கச் செய்வது எப்படி என்றெல்லாம் தீர்வுகளைக் காண்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். இன்று வரை, எமது நீர்த்தேக்கங்கள் அனைத்தும் போல் 80% வீதம் நீர் நிரம்பிய நீர்த்தேக்கங்களாகக் காணப்படுகின்றன. ஆகையால், எதிர்காலத்தில் எந்த ஒரு விதத்திலும் மின் துண்டிப்பை அமுலாக்கப் போவதில்லை என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பற்றிய அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

‘முழு நாட்டிற்கும் ஒளி, இருள் நீங்கும்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக அனுராதபுர மாவட்டத்தை 100% மின்சார வசதியுடையதாக மாற்றி முடியும் இந்தத் தருனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். இங்கு அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களினால் அனுராதபுர மாவட்டத்தின் கெக்கிராவ, மெதகம போன்ற 5 கிராமங்களிலுள்ள வீடுகளுக்கு மின்சார இணைப்பை வழங்கி, அனுராதபுர மாவட்டத்தை 100% மின்சார வசதியுடையதாக மாற்றியுள்ள விடயமும் நினைவு கூறப்பட்டது.

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்……

நாம் பொலன்னறுவை, கேகாலை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று 100% மின்சார வசதிகளை வழங்கி நிறைவு செய்துள்ளோம். அடுத்த கட்டமாக, நாம் மாத்தறை மாவட்டத்திற்குச் செல்லவிருக்கின்றோம். சமூகத்தில் பல பிரிவு மக்கள் இருக்கின்றனர். வாயில் பலமுள்ள மக்கள் எந்த விதத்திலாவது தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். வாயில் பலமில்லாத மக்கள் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இயலாது அவதிப்படுகின்றனர். நாம் எழுந்து கூக்குரலிட்டால் சத்தமில்லாத பலமில்லாதவர்கள் எழுந்து நிற்க மாட்டார்கள். நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் அந்த சத்தமில்லாத பலமில்லாத மக்களை நாம் எந்த விதத்திலாவது தட்டியெழுப்பி எம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் எதிர்பார்க்கின்றோம் விரைவில் எல்லா வீடுகளுக்கும் மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுத்து, மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆசியாவில் எமது நாட்டை மின்சாரத்தில் பெருமையுடைய ஒரு நாடாக ஆக்குவதற்கு. அதே போன்று சமூகத்தில் உதவி செய்ய வேண்டிய மக்களுக்கு உதவி செய்து பெரும் புரட்சியைக் காணவும் விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில், இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபால அவர்களும், பொது முகாமையாளர் திரு என்.சி. விக்ரமசேக்கர அவர்களும், அனுராதபுர மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலாளரும், பிரதேச செயலாளர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

2Y1A070412Y1A07151