05 0

Posted by  in Latest News

தேர்ந்தெடுக்கப்பட்ட வணக்க ஸ்தலங்களுக்கு சூரிய சக்தி மூல மின்னுற்பத்திப் பலகைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

சுற்றாடல் என்பது எம்மைச் சூழ்ந்திருக்கின்ற, எம்மால் நிர்மாணிக்க முடியாத சகல வஸ்துகளுமாகும். சுற்றடால் இன்றி எம்மால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. ஆகையால் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. இன்றும் கூட எமது நாட்டில் 50% வீதமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் மூலமாகும். அதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதற்கு இடையில் கனிய எண்ணெய் வளங்களையும் பயன்படுத்துவதற்கு நேரிடும். இந்தக் கனிய எண்ணெய்களின் தகனத்தினால் சுற்றாடலுக்குப் பாதிப்பான வாயுட்கள் சுற்றாடலில் சேருகின்றன. அதே போன்று, எமது நாட்டுப் பணம் வெளிநாடுகளுக்குச் செல்கின்றது. ஆகையால் அந்நியச் செலாவணிகளை சேமித்துக் கொள்வதற்கும், சுற்றாடலைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அதிகளவில் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் பால் நகர்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். எமது நாடு மத்திய கோட்டிற்கு அருகில் அமைந்திருப்பதால் வருடத்தின் அதிக காலம் சூரிய ஒளி கிடைக்கின்றது. ஆதலால், சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நாம் திட்டமிடுகின்றோம். இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த ரிவி அருண கருத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வணக்க ஸ்தலங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்திப் பலகைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுத்து, அந்த வணக்க ஸ்தலங்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கேகாலை வெந்தல ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் இடம் பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சினது வழிகாட்டலின் கீழ் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் இந்தக் கருத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வணக்க ஸ்தலங்களை இலக்காகக் கொண்டு 2 கிலோவொட் சூரிய சக்தி மூல மின்னுற்பத்திப் பலகைகளை இலவசமாக விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு சூரிய சக்திப் பலகைக்கு இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் 6 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது.

மேலும், கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்…,

“இதற்கு முன்னர் தேவையான நபருக்கு தனிப்பட்ட ரீதியில் தனது வீட்டுக் கூரையில் சூரிய சக்திப் பலகையைப் பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆயினும், தனது நுகர்வுக்கு அதிகமாக உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு (இ.மி.ச.) விநியோகிப்பதற்கு அல்லது அதற்குப் பதிலாக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அந்த நபருக்கு கிடைக்கவில்லை. ஆயினும், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் ரிவி அருணக் கருத்திட்டம் மற்றும் தேறிய மாணிவாசிப்பு மையக் கருத்திட்டம் முதலிய கருத்திட்டங்களின் கீழ் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்திப் பலகைகளைப் பொருத்திக் கொள்ளும் வகையில் கடன் தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அத்தகைய நபர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திலிருந்து மேலதிக மின்சாரத்தை இ.மி.ச.சபைக்குப் பெற்றுக் கொண்டு நியாயமான ஒரு கொடுப்பனவை வழங்குவதற்கும் நாம் தயாராகவுள்ளோம்’ எனவும் தெரிவித்தார்கள்.

00100322