05 0

Posted by  in Latest News

மீமுற வாழ் மக்களுக்கு மின்சாரம் ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக மீமுற வாழ் மக்களுக்கு 100% வீத மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பொருட்டு குறைந்த விலையுடைய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களின் பால் நாம் நகர்ந்துள்ளோம். முன்னர், ஒரு மின்னுற்பத்தி நிலையத்தைத் தாபிப்பதற்கு பொது மக்களால் எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. அரசாங்கம் அல்லது ஒரு நிறுவனம் மாத்திரமே தாபிக்கும். ஆனால், இன்று மின்னுற்பத்தி நிலையங்களைத் தாபிப்பதற்கும், அந்த மின்னுற்பத்தி நிலையங்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை பிரதான மின்சார வலையமைப்புக்கு இணைப்பதற்கும் தேவையான எந்த ஒரு நபருக்கும் வாப்பு இருக்கின்றது. ஆகையால், எந்த ஒரு தராதரத்திலுள்ளவராயினும் 2 மெகாவொட்டுக்கு குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்தால், அவ்வாறு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை இலங்கை மின்சார சபையினால் நியாயமான ஒரு விலையில் கொள்வனவு செய்யும் விதத்தில் நாம் ஒரு சட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதே போன்று, 5 மெகாவொட்டுக்குக் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்தால், மின்சார முறைமையின் கொள்திறனுக்கு ஏற்ப அந்த மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கும், 5 மெகாவொட்டுக்கு அதிகம் மின்சாரத்தை உற்பத்தி செய்தால், அந்த மின்சாரத்தை போட்டி விலை அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கும், இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கும். எதிர்காலத்தில் நாம் ஏனைய நிறுவனங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது, உலக சந்தையில் நிலவும் விலையுடன் போட்டியிட்டு, குறைந்த நன்மை பயக்கக் கூடிய விலையில் இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் விதத்திலாகும். அன்று, இந்த நாட்டில் சுமார் 5 இலட்சம் பிள்ளைகள் இருந்தார்கள் குப்பி விளக்கில் பாடங்களைக் கற்றவர்கள். இந்த 5 இலட்சம் பிள்ளைகளும் மின்சார ஒளியில் பாடங்களைக் கற்று, அவர்களை கற்றோராக ஆக்குவதற்கு நாம் தயாராகவிருக்கின்றோம். மின்வலு சக்தி அமைச்சர் என்ற ரீதியில், மின்வலு சக்தி அமைச்சு, மின்சார சபை ஆகியன ஒன்றிணைந்து, கட்சி பேதங்களின்றி, எமது நாட்டு மக்களுக்கு 24 மணித்தியாலமும் ஆகக் குறைந்த விலையில் தொடர்ச்சியாக, தரமான, சுற்றாடலுக்கு குறைந்த அளவு பாதிப்புடைய மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பது எனது முக்கிய குறிக்கோளாகும்’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

கடந்த தினத்தில் கண்டி மாவட்டத்தின் மீமுறப் பிரதேசத்தை 100% மின்சார வசதியுடையதாக ஆக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்….

“பிரதான மின்சார முறைமை இன்று கிராமங்கள் வரை மின்சார வசதிகளை வழங்கியுள்ளது. இ.மி.ச. எப்பொழுதுமே பொது மக்கள் பற்றி சிந்திக்கின்றது. மிகவும் முன்னேற்றகரமாக செயல்படுகின்றது. முன்னர் என்றால் ஒரு கிராமத்திற்கு மின்சாரத்தை வழங்கப் போனால், அதற்காக அதிகளவு பணத்தை செலவிட்டு கிராமத்திற்கு மாத்திரம் மின்சாரத்தைக் கொண்டு வந்து, தேவையானால், தேவையானவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்குப் பெற்றுக் கொள்ளுமாறு கூறிய காலம் இருந்தது. ஆனால், இப்பொழுது நாம் கிராமங்களின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் மின்சாரத்தை வழங்குகின்றோம். இது தவிர, வீடுகளுக்கு மின்சார வயர்களை இணைத்துக் கொள்வதற்கும், மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் நிதி வழங்கப்படுகின்றது. மின்சாரம் என்பது மக்களுக்கு தம்முடைய நாளாந்த வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த மிகவும் அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதி ஒன்றாகும். மக்களுக்கு மின்சாரமின்றி ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற அளவுக்கு மின்சாரம் இன்று மிக இன்றியமையாத அத்தியாவசிய ஒரு உட்கட்டமைப்பு வசதியாக மாறியுள்ளது. இவ்வாறு வாழ்க்கையுடன் மிகவும் பின்னிப்பிணைந்த அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதியைப் பெற்றுக் கொடுக்கும் போது, ஒரு வீட்டுக்கு மின்சாரத்தை வழங்க மூன்று இலட்சம் ரூபா செலவு செய்யும் அளவுக்கு இன்று மின்சார சபை முன்னேற்றம் அடைந்துள்ளது. மின்சார உற்பத்தியில் நாம் இது வரை முன்னேற்றத்தைத்தான் அடைந்துள்ளோம்’ எனவும் குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில் வடமேல் மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, உடுதும்பறை ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் சானக்க ஐலப்பெரும, சபரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஹர்ஷ சியம்பலாபிட்டிய, மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.சி. விக்ரமசேக்கர ஆகியோர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

01 (1)0204 (1)03 (1)05