06 0

Posted by  in Latest News

உள்நாட்டு சக்தி உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு செக்கோஸ்லோவியா அரசாங்கம் உதவும்

இலங்கை தற்பொழுது தேசிய ரீதியில் கவனம் செலுத்தி வருகின்ற மின்சக்தி உற்பத்தித் துறையின் வளர்ச்சி மற்றும் சக்தியைப் பாதுகாக்கும் உபாயமுறைகள் என்பன தொடர்பில் செக் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தியிருப்பதால் தனது நாடு சக்தி உற்பத்தித் துறையில் பெற்ற அனுபவத்தையும் மற்றும் தொழில்நுட்ப அறிவையும் பிரபல்லியப்படுத்துவதை நோக்கி விஷேட கவனத்தைச் செலுத்தியிருப்பதாக செக்கோஸ்லோவியா தூதுவர் மாண்புமிகு மிஹான் ஹொச்சர்கா (HE Mr. Milan Hovorka) அவர்கள் தெரிவித்தார்கள். செக் அரசாங்கத்தின் தூதுவர், மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களை அமைச்சு வளாகத்தில் சந்தித்த வேளையிலேயே இவ்வாறு தெரிவித்தார்கள்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இவ்வாறு மின்சக்தி உற்பத்தித் துறையின் வளர்ச்சியை நோக்கி பங்களிப்பதற்குத் தீர்மானித்ததாகத் தெரிவித்த செக் அரசாங்கத்தின் தூதுவர், நிலக்கரி அனல் சக்தி உற்பத்தி தொடர்பில் விஷேட அனுபவமும் மற்றும் தொழில்நுட்ப அறிவும் உடைய தனது அரசாங்கம், அந்த அனுபவத்தையும் மற்றும் தொழில்நுட்ப அறிவையும் இலங்கைக்குப் பெற்றுக் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார்.
இந்த விடயங்களுக்கு மேலதிகமாக, நீண்டகாலமாக நிலவி வருகின்ற இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள இரு தரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் விடய அமைச்சருடன் மேலும் கருத்துத் தெரிவித்து கலந்துரையாடிய செக்கோஸ்லோவியா தூதுவர், இந்த நாட்டின் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தியை விஸ்தரிப்பதற்கும் மற்றும் சக்தித் துறையின் முன்னேற்றத்திற்கு ஒரு நாடு என்ற ரீதியில் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஆகக் கூடிய உதவிகளை வழங்குவதற்கும் செக் அரசாங்கத்தின் சார்பில் தான் உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் செக்கோஸ்லோவியா அரசாங்கம் சார்பாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான தூதுவர் அதிபதி டாக்டர் லோஹித்த சமரவிக்ரம அவர்கள் உள்ளிட்ட செக். தூதுவராலயத்தின் அதிகாரிகள் பலரும், மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்களும் கலந்து கொண்டனர்.

01-102-1