Posted by superadmin in Latest News
கடந்த 25 ஆம் திகதி திங்கட்கிழமை தான் மின்சாரத்திற்கு அதிகளவான பதிவாகியிருக்கின்றது. இது ஏறக்குறைய 2452.9 மெ.வொ. அளவாகக் காணப்பட்டது. இது தான் இந்நாட்டில் பதிவாகிய ஆகக் கூடிய மின்சாரத்திற்கான தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு 42.35 ஜ.வொ.ம. மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆகக் கூடிய மின்சாரத் தேவை பதிவாகியிருப்பது இந்த மாதம் 05 ஆம் திகதி. அது சுமார் 2393.4 மெ.வொ. அளவாகும். இது தான் இரண்டாவது அதிகளவு மின்சாரம் தேவைப்பட்ட நாள். அதிக வெப்பம் இதற்கு முக்கியமான காரணம் என்பதை நாம் காண்கின்றோம். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சார ஒளிக்கு போல் மின் விசிறிகளுக்கும் மற்றும் குளிரூட்டிகளுக்கும் அதிக மின்சாரம் தேவைப்பட்டுள்ளது. ஆகையால் தான் மின்சாரத்திற்கான தேவை இவ்வளவு அதிகரித்துள்ளது’ என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்….
’2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் நிலவிய மின்சாரத்திற்கான தேவையுடன் ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டு சனவரி மாதத்தின் மின்சாரத்திற்கான தேவை 9.91% வீதத்தினால் அதிகரித்திருக்கின்றது. அதே போல் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் 13.5% வீதத்தினால் மின்சாரத் தேவை அதிகரித்திருக்கின்றது. மார்ச் மாதத்தில் 9.88 % வீதத்தினால் மின்சாரம் அதிகரித்திருக்கின்றது. பல வருடங்களின் வரலாற்றுக் கண்ணோட்டங்களில் பார்க்கையில் 2015 ஆம் ஆண்டு 03 மாதங்களுடன் ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டு அந்த 03 மாத காலங்களினுள் மின்சாரத்திற்கான தேவை அதிகளவில் அதிகரித்திருக்கின்றது.
வெப்பநிலையை எடுத்து நோக்கும் போது 2015 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தைப் பார்க்கிலும் 2016 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் மின்சாரத்திற்கான தேவை 1 அலகினால் அதிகரித்திருக்கின்றது. மார்ச் மாதத்தில் 2015 ஆம் ஆண்டை விடவும் 2016 ஆம் ஆண்டில் இரண்டு அலகுகளினால் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்திருக்கின்றது. ஏப்ரல் மாதத்திலும் 2015 ஆம் ஆண்டை விடவும் 2016 ஆம் ஆண்டில் மின்சாரத்திற்கான தேவை இரண்டு அலகுகளினால் அதிகரித்திருக்கின்றது.
மறு புறத்தில் பார்க்கும் போது மழை வீழ்ச்சி இதற்கு ஒப்பீட்டளவில் குறைந்திருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு பெப்ருவரி மாத்தை விடவும் 2016 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் 51 மில்லி லீற்றர் அளவினால் மழை வீழ்ச்சி குறைந்திருக்கின்றது. மார்ச் மாதத்தில் 2015 ஆம் ஆண்டை விடவும் 2016 ஆம் ஆண்டில் 233 மில்லி லீற்றர் அளவினால் மழை வீழ்ச்சி குறைந்திருக்கின்றது. அதே போன்று, 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்தை விடவும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மழை வீழ்ச்சி 171 மில்லி லீற்றர் அளவினால் குறைந்திருக்கின்றது. பொதுவாக இந்த 03 மாதங்களையும் எடுத்துப் பார்க்கும் போது 2015 ஆம் ஆண்டில் இந்த மூன்று மாதங்களிலும் 692 மில்லி லீற்றர் மழை வீழ்ச்சி கிடைத்திருக்கின்றது. 2016 ஆம் ஆண்டில் கிடைத்திருப்பது 237 மில்லி லீற்றர் அளவான சொற்ப மழை வீழ்ச்சியே. அதன்படி பார்க்கின்ற போது மழை வீழ்ச்சியில் 455 மில்லி லீற்றர் குறைவொன்று காணப்படுகின்றது. இதனை விகிதாசாரத்தில் பார்க்கும் போது 65% வீத மழை வீழ்ச்சி குறைந்திருக்கின்றது.
எங்களது நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது 50% வீதமான அளவு நீரிலிருந்து. அதற்கு நேரடியாகப் பாதிப்பது இந்த மழை வீழ்ச்சி. இந்த ஆண்டு 03 மாத காலங்களினுள் 65% வீத மழை வீழ்ச்சி குறைவடைந்திருக்கின்றது. இதனால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. மின்சாரத்திற்கான தேவை 11 % வீத அளவினால் அதிகரிக்கின்ற போது, நாங்கள் இந்த நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கும் பொருட்டு பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து செயல்பட்டு வருகின்றோம்’ எனவும் குறிப்பிட்டார்கள்.