சாம்பூர் அனல் மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும்
27 0

Posted by  in Latest News

பிரதான மின்சார முறைமைக்கு 500 மெ.வொ. சக்திக் கொள்திறனை விநியோகிக்கும் வகையில் சாம்பூர் அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கு தனது நாடு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ஜப்பான் நாட்டுத் தூதுவர் மாண்புமிகு கெனிச்சி சுகனுமா (H.E. Mr. Kenichi Suganuma) அவர்கள் உறுதியளித்தார்கள். மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களுடன் அந்த அமைச்சில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட வேளையிலேயே தூதுவர் இவ்வாறு உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் ஜப்பான் நாடு சார்பாக அந்நாட்டுத் தூதுவர் மாண்புமிகு கெனிச்சி சுகனுமா (H.E. Mr. Kenichi Suganuma) மற்றும் ஜப்பான் அபிவிருத்திக் கூட்டுறவுப் பிரிவின் பிரதான செயலாளர் திரு கிச்சிரோல் ல்வேஸ் (Mr. Kiichirol Lwase) ஆகியோரும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களும் கலந்துகொண்டனர்.
உலகத்தில் அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் சம்பந்தமாக ஏற்கெனவே காணப்படுகின்ற நவீனத் தொழில்நுட்பத்தை சாம்பூர் அனல் மின்னுற்பத்தியை நிர்மாணிப்பது தொடர்பில் பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டிய ஜப்பான் தூதுவர், மிகவும் சிறந்த சுற்றாடல் நேயமான ஒரு கருத்திட்டமாக சாம்பூர் அனல் மின்னுற்பத்தி நிலையக் கருத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
சாம்பூர் அனல் மின்னுற்பத்திக் கருத்திட்டத்திற்கான அடிப்படை சாத்தியவள ஆய்வு அறிக்கையை இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் சமர்ப்பிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மற்றும் அடுத்த ஆண்டு இந்தக் கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் ஜப்பான் தூதுவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a comment

* required