03 0

Posted by  in Latest News

· திடீர் சோதனை நடவடிக்கையால் 90 இலட்சத்திற்கும் அதிகமான இலாபம்

· மோசடியாக மின்சாரத்தை நுகர்வோர் பற்றி 011 2422259என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு அறிவிக்குமாறான வேண்டுகோள்.

இ.மி.ச. திடீர் சோதனையிடும் பிரிவினது அலுவலர்களினால் பெப்ருவரி மாதத்தினுள் மாத்திரம் நாடு முழுதிலும் மேற்கொண்ட திடீர் சோதனைகளினூடாக ரூ. 9,005,433.04 (90 இலட்சத்திற்கும் அதிகமான) வருமானம் கிடைத்துள்ளது. இந்தத் தொகையில் ரூ.975,000.00 தொகை நீதிமன்றத் தண்டப்பணங்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் மாணிவாசிப்புகளை மாற்றுதல், மாணிவாசிப்புக் கருவிகளினுள் கொக்கிகளைச் சொறுகிவிடுதல் முதலிய வழிகளில் மின்சாரத்தைப் பெறுவது போன்ற சட்டமுறையற்ற மின்சார நுகர்வுகள் தொடர்பான 223 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 161 சம்பவங்கள் மோசடியான முறையில் மாணிவாசிப்புக் கருவிகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை நுகர்ந்தமையுடன் சம்பந்தப்பட்டனவாகக் காணப்படுகின்றன. எஞ்சிய 62 சம்பவங்களும் கொழுக்கிகளை சொறுகி சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றமையுடன் சம்பந்தப்பட்டுக் காணப்படுகின்றன.
இவ்வாறு மின்சார வாசிப்புக்கருவிகளை கள்ளத்தனமாகப் பொருத்துதல், கொக்கிகளைச் சொறுகுதல் முதலிய வழிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் பற்றி முறைப்பாடு செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். அத்தகைய சட்டவிரோதமான மின்சார நுகர்வுகள் இடம்பெற்றால் அது பற்றி 0112422259என்ற தொலைபேசி இலக்கதினூடாக இ.மி.ச. விசாரணைப் பிரிவுக்கு அறியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் வேண்டுகின்றோம். இவ்வாறு சட்டத்தின் முன் குற்றவாளியாகக் காணப்படும் நபர்களுக்கு எதிராக விதிக்கப்படும் நிதி மற்றும் ஏனைய வழிகளிலான தண்டங்களுக்கு மேலதிகமாக அவர்களின் மின்சார இணைப்பை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத விதத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள்.