Posted by superadmin in Latest News
ஒருவரை ஒருவர் குறை கூறுவதைத் தவிர்த்து நாம் ஒற்றுமையாக சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம் என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள். அனுராதபுர புனித நகரத்தில் இடம்பெற்ற மின்சார சிரமதான வாரத்தின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
இலங்கையிலுள்ள மின்சார மார்க்கங்களை நீள அளவில் எடுத்துக்கொண்டால் அண்ணளவாக இரண்டரை இலட்சம் கிலோ மீற்றர்கள் அளவில் காணப்படுகின்றன. இவற்றை உரிய முறையில் பராமரித்து நுகர்வோருக்கு சிறந்த ஒரு சேவையை வழங்குவதே எமது நோக்கமாகும். இதன் போது ஊழியர்களுக்கு இடையில் ஒற்றுமை, வலிமை என்பவற்றை ஒன்றிணைத்து சவால்களை எதிர்நோக்க நேரிடும் வேளைகளிலேயே அவற்றுக்கு ஒருவரை ஒருவர் குறை கூறாமல் முகம்கொடுப்பதற்கான பழக்கத்தை இந்த மின்சார சிரமதான வாரத்தின் அங்குரார்ப்பண வைபத்தைக் கொண்டு நாம் அறிமுகப்படுத்துவோம்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுதிலும் மின்சார ஊழியர்களின் சிரமப் பங்களிப்பில் விரைவில் மின்சார சேவையை இற்றைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனை எமது ஊழியர்கள் எமக்குப் பெற்றுத்தரும் சிறப்புப் பங்களிப்பு என்றால் அது மிகையாகாது.