09 0

Posted by  in Latest News

எமக்கு இருக்கின்ற முக்கிய பொறுப்புதான் மின்சாரத்தை உற்பத்தி செய்வது. இதற்கிடையில் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தியை உற்பத்தி செய்வதும் புதிதாக எம்முடன் இணைந்த ஒரு விஷேட பொறுப்பாகும். குறிப்பாக, தேறிய மாணிவாசிப்பு முறை எமக்கு மிகவும் முக்கியமானது. புதிய கருமங்களை மேற்கொள்ள நாம் எப்பொழுதும் முயற்சிப்போம். அதனால் தான் இந்த தேறிய மாணிவாசிப்பு முறையை எம்மால் அறிமுகப்படுத்த முடிந்தது. இதனை வர்த்தக சமூகங்கள் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்ததாக அறிமுகப்படுத்தி வருகின்றன. இவர்களின் போட்டியினூடாக நுகர்வோர் இறுதியில் ஏதாவது ஒரு சிக்கலுக்கு ஆளாகுகின்றனர். ஒரு அமைச்சு என்ற ரீதியில் நுகர்வோரை இத்தகைய சிக்கலில் இருந்து மீட்கும் பொருட்டு ஏதாவது ஒரு நியமத்தை ஏற்படுத்தும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. எமது நாட்டில் நேரடி வரிகள் மிகவும் குறைவு. எமது நாட்டின் தலா வருமானத்தினதும் மற்றும் வரி செலுத்தும் அளவினதும் அடிப்படையில் நேரடியாக வரிகளைச் செலுத்தும் 10-12 இலட்சத்திற்கு இடைப்பட்ட மக்கள் இருக்க வேண்டும். ஆனால், இருப்பதே 30 இலட்சம் போன்ற ஒரு குறுகிய அளவாகும். முழு மொத்த சமூகத்தையும் எடுத்து நோக்கும் போது, மேலும் சலுகைகளை வழங்குவது என்பது ஒரு பிரச்சினையாக மாறும். இவை அனைத்தையும் சமப்படுத்தித் தான் அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். சமப்படுத்தும் இத்தகைய பயணத்திலும் அதிகளவில் உதவ வேண்டிய, அறிமுகப்படுத்த வேண்டிய ஒரு துறையான இந்த தேறிய மாணிவாசிப்புத் துறை தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். எவ்வாறாயினும், இந்தத் தேறிய மாணிவாசிப்பு முறையின் கீழ் ஒவ்வொரு வீடும் மின்னுற்பத்தி நிலையமாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை’ என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தெரிவித்தார்கள்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு இலட்சம் வீடுகளுக்கான தேறிய மாணிவாசிப்பு முறையை வலையமைப்புப்படுத்தும் புன்னிய கருமம் பற்றி சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமைகளைத் தாபிக்கும் தரப்புகளை விழிப்பூட்டும் கருத்தரங்கில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள். மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரனி கெளரவ அஜித் பி. பெரேரா அவர்களும் இதன் போது கலந்து கொண்டார்கள்.

2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேறிய மாணிவாசிப்பு முறையானது மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தி முயற்சியில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றது. ஏற்கெனவே தேறிய மாணிவாசிப்பு தொடர்பில் ஏறக்குறைய 20 மெ.வொ. சக்திக் கொள்திறனை வலையமைப்புப்படுத்த முடிந்துள்ளது.

இங்கு, மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள்…..

எங்களது அமைச்சை ஏனைய அமைச்சுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மக்களுக்கு இந்த அமைச்சு இன்றி ஒரு கனமும் இருக்க முடியாது. எமது அமைச்சு ஒரு கனப் பொழுதேனும் இயங்காதிருந்தால் ஐம்பத்து ஐந்து இலட்சம் வீட்டு உரிமையாளர்களும் அதே போன்று வர்த்தக சமூகங்களும் குரலும் கோசங்களும் எழுப்புவார்கள். அமைதியான மக்களுடன் எதனையும் செய்ய முடியும். ஆயினும், எமது அமைச்சினால் அவ்வாறு செய்ய முடியாது. எமது அமைச்சுடன் எப்பொழுதும் தொடர்புபட்டிருப்பது குரல் எழுப்பும் மக்கள். பிரதி அமைச்சர் அவர்களின் பெரும் அர்ப்பணிப்பில் ஏற்கெனவே 2030 ஆம் ஆண்டு வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். இந்தத் திட்டங்களைத் தயாரிக்கும் போது அதிக விலை குறைந்த மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களுக்கு பெருமளவில் நெகிழ்ந்து செல்வதற்கும், மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி உற்பத்திப் பிரிவுக்கு அதிக கவனம் செலுத்தி, அத்தகையவர்களுக்கு சலுகைகளை வழங்கி, ஏதாவது ஒரு நியமத்தின் கீழ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய திட்டங்களைத் தயாரிப்போம்’ எனவும் குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சினதும், இலங்கை மின்சார சபையினதும், இலங்கை மின்சார தனியார் கம்பனியினதும், மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அதிகார சபையினதும் சிரேஷ்ட அதிகாரிகளும், நெட் மீட்டரிங் கம்பனியின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.