02 0

Posted by  in Latest News

மக்களுக்கு மின்சாரத்தை வழங்கும் செயற்பணியை சமூகப் பணியாகவே நாங்கள் மேற்கொள்கின்றோம். மின்சாரம் என்பது உட்கட்டமைப்பு வசதிகளில் ஒன்றாகும். கம்பஹா என்பது மிகவும் அபிவிருத்தி அடைந்த ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் சனத்தொகை 23 இலட்சத்திற்கும் அதிகமானதாகும். சொல்லப் போனால் 6 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருக்கின்றன. இந்த மக்களில் சுமார் 4805 வீடுகளுக்கு மின்சார வசதிகள் கிடைக்கவில்லை.

தற்பொழுது செயற்படுத்தப்படுகின்ற ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1364 வீடுகளுக்கு மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது வரை 3441 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இவ்வாறு வீடுகளுக்கு மின்சார வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கு பொருளாதார நிலை, சட்டதிட்டங்கள், சமூக அல்லது பெளதீகப் பிரச்சினைகள் என்பன காரணமாக இருந்திருக்கலாம். இவ்வாறு எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும், இவற்றுக்கெல்லாம் தீர்வைக் கண்டு, எதிர்வரும் ஏப்ரல் மாதம்இறுதியளவில் முழு கம்பஹா மாவட்டத்திற்கும் மின்சாரத்தை வழங்குவதற்கு

நடவடிக்கை எடுக்கப்படும்’ என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்தெரிவித்தார்கள்.

‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே

அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.  இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய

அவர்கள்…..

‘ஏற்கெனவே நாம் இலங்கையின் சனத்தொகையில் 98% வீதமான மக்களுக்கு மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இலங்கையில் இன்னும் 250,000 மக்கள் மின்சார வசதிகளின்றி இருக்கின்றனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் ஓரங்கட்டப்பட்ட ஒரு சமூகக் குழுவினராகும். இவர்கள் குறைந்த வருமானமுடையவர்கள். இவர்களில் அதிகமானோரின் வீடுகளுக்கு அருகில் மின் கம்பங்கள் வந்தடைந்துள்ளன. ஆயினும், வீடுகளுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பல ஆண்டுகள் எடுத்துள்ளன. எவ்வாறாயினும், பல

காரணங்களினால் வீடுகளுக்கு மின்சாரத்தை இவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இலங்கை மின்சார சபைக்கு இது தொடர்பில் பெறும் பொறுப்பு இருக்கின்றது. அந்த மக்களுக்கு மின்சார வசதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் நாம் ஏற்கெனவே சலுகைக் கடன் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

அதே போன்று சட்ட மற்றும் பெளதீகப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளாக நாம் வீட்டு உறுதிப்பத்திரங்களைப் பரிசீலித்தல், வீடுகளின் நிலைமைகளைப் பரிசீலித்தல் தொடர்பான சட்டதிட்டங்களை முடியுமான அளவு இலகுபடுத்தியுள்ளோம். இந்த விதத்தில் இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும்

தீர்த்து, தேசிய கருமப் பணி ஒன்றாக நாம் இந்த நாட்டிற்கு 100% வீத மின்சார வசதிகளை வழங்க முயற்சிப்போம்’ எனவும் குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்துப்புள்ளே, பிரதி அமைச்சர் துலிப் விஜேசேக்கர, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சம காலத்

தலைவர் திரு அஜித் மான்னப்பெரும, திரு எட்வெட் குணசேக்கர, திரு காவிந்த ஜயவர்த்தன ஆகிய அமைச்சர்களும், கம்பஹா மாவட்டத்தின் செயலாளர், பிரதேச

செயலாளர்கள், இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கலாக அரசாங்க ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.