Posted by superadmin in Latest News
‘98% மின்சார வசதியை வழங்கியேனாம் என்றும், எஞ்சிய 2% வீத அளவான
மின்சாரத்தை வழங்குவது அவ்வளவு பிரச்சினையான விடயமல்ல என்றும் சிலர்
கூறுகின்றார்கள். ஆனால், இந்த எஞ்சிய 2% வீதமான மின்சாரத்தை
வழங்குவது தான் மிகவும் கடினம். ஒரு சிலரின் வீடுகளுக்கு அருகில் மின்சாரம்
வந்து பல வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் அவர்கள் தமது வீடுகளுக்கு
மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. மின்சார வசதியைப் பெற்றுக் கொள்ள
முடியாமைக்கு பல காரணங்கள் அதாவது பொருளாதாரம், சட்டதிட்டங்கள்,
மனோபாவம் அல்லது சமூகப் பெளதீகப் பிரச்சினைகள் இருக்கலாம். இந்தப்
பிரச்சினைகள் அனைத்துக்கும் நாம் தீர்வுகளைக் கண்டு இந்த நாட்டில் 100%
மின்சாரத்தை வழங்க முயற்சிக்கும் சந்தர்ப்பம் இது. இலங்கை மின்சார சபைக்கு
இது தொடர்பில் பெரும் பொறுப்பு இருக்கின்றது. ஒரு சிலர் மிகவும் இலகுவாக
இலங்கை மின்சார சபையைப் பற்றிக் கதைத்தாலும், தெற்காசியாவில் 100% வீதம்
24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்கும் ஒரேயொரு நாடாக இலங்கையைத்
ஆக்கிய பெருமை இலங்கை மின்சார சபைக்குரியதாகும். இலங்கை மின்சார பை
தெளிவான மக்கள் நேய நேரான ஒரு பயணம் ஒன்றை மிகவும் துரித கெதியில்
பயணிக்கும் ஒரு சந்தர்ப்பம் இது’ என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி
வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இலங்கையை மின்சாரத்தினால் ஒன்றிணைக்கும் ‘முழு நாட்டிற்கும் ஒளி, இருள் நீங்கும்’ என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபையினால் மாகோ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மாகோ க்றிட் உப மின்னிலையத்தைத் திறந்து வைக்கும் வைபத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே
அமைச்ர் அவர்கள் இவ்வாறு தெவித்தார்கள். இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த கெளரவ அமைச்சர் அவர்கள்….. மின்னுற்பத்தி, மின்சார செலுத்துகை மற்றும் மின்சாரப் பகிர்ந்தளிப்பு முதலிய விடயங்களின் போது பாரிய தடைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். அவற்றுக்கும் நாம் முகம்கொடுத்த வண்ணம் தான் இந்தப் பயணத்தைப் பயணிக்கின்றோம்.
இவை எல்லாவற்றையும் முறியடித்து நாம் முன்னேறிச் செல்வதற்குக் காரணம்
மக்கள் பின்னிணைப்பிணைந்திருக்கின்ற மின்சாரத்திற்காகவாகும். மக்களின்
நாளாந்த விடயங்கள் அனைத்தும் மின்சாரத்துடன் பின்னிப்பிணைந்திருப்பதால்,
மின்சாரம் ஒரு கனப் பொழுதுக்கு இல்லை என்றால் மக்கள் அதனை கடுமையாக
உணர்வார்கள். பல விடயங்கள் மாற்றமடைந்துள்ளன. நாடு மிகவும் சமாதான
நிலையில், ஒன்றிணைந்து தேசிய கொள்கையின் அடிப்படையில் முன்னேறிச்
செல்லும் தருனம் இது. அரசியல் மாற்றங்களையும் பிரயோகித்து இலங்கையை
உலகில் அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாக ஆக்குவதற்கு நாம் முயற்சிப்போம்.
இதற்கு மின்சாரமும் ஒரு அத்தியாவசிய விடயமாகும். வடமேல் மாகாணத்தில்
துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்துப் பகுதிகளிலும் தடைகளை
உடைத்தெறிந்து, மின்சார செலுத்துகை க்றிட் உப மின்னிலையம் ஒன்றை
நிர்மாணிக்கக் கிடைத்தமையையிட்டு நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்’
எனவும் தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வில் காணி இராஜாங்க அமைச்சர் கெளரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, மின்வலு
மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி
சுரேன் பட்டகொட, இலங்கை மின்சார சபையின் தலைவர் திரு அனுர விஜேபால
ஆகியோர் அடங்கலாக கேகாலைப் பிரதேச அரசியல்வாதிகள் பலரும் கலந்து
கொண்டனர்.