Posted by superadmin in Latest News
கடந்த தினங்களில் ஏற்பட்டிருந்த பாதகமான கால
நிலைமைகளின் காரணமாக நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி
நிலையம் செயலிழந்தது காணப்பட்டது. இதனையடுத்து அதில்
மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளின் பின்னர், அந்த
மின்னுற்பத்தி நிலையத்தின் 900 மெ.வொ. மொத்த மின்னுற்பத்திக்
கொள்திறனும் இன்றிலிருந்து மீண்டும் தேசிய மின்சார முறைமைக்கு
விடுவிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள்
அமைச்சர் கெளவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.
300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கேகாலை நகர
விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துவது
தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த அவதானிப்பு சுற்றுப் பயணத்தில் கலந்து
கொண்ட நேரத்திலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
கேகாலை நகர விளையாட்டு மைதானம் தொடர்பான
அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் பின்னர் மேலும் கருத்துத்
தெரிவித்த அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய
அவர்கள், தேசிய மின்சார முறைமைக்கு அதிகளவில்
பங்களிக்கும் நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தில்
கடந்த தினங்களின் போது ஏற்பட்ட பாதகமான நிலைமைகளை
இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததையடுத்து மீண்டும் தேசிய
மின்சார முறைமை வழமை போல் இயங்குகின்றது எனக்
குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வில் கேகாலைப் பகுதி அரிசயல்வாதிகள் உள்ளிட்ட
பலரும் கலந்து கொண்டனர்.