Posted by superadmin in Latest News
மீளப் புதுப்பிக்கத்தகு சக்திக் கருத் திட்டங்களுக்கு ஈரான் அரசாங்கத்தின் உதவி…
இலங்கை எதிர்நோக்கி வருகின்ற மின்சார நெருக்கடிகளுக்கு ஒரு நிலையானப் பரிகாரத் தீர்வாக ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்கள் தொடர்பில் ஈரான் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தனது நாட்டில் காணப்படும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி தொடர்பான அறிவை இலங்கையிலும் பிரபல்லியப்படுத்துவதன் பால் விஷேட கவனத்தை தனது அரசாங்கம் செலுத்தியிருப்பதாக ஈரான் நாட்டு மின்வலு சக்தி அமைச்சர் மாண்புமிகு ஹமீட் அவர்கள் (Mr. Hamid Chichian) தெரிவித்தார்கள்.
கடந்த தினத்தில் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களை சந்தித்த ஈரான் நாட்டு மின்வலு சக்தி அமைச்சர் அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாக, ஈரான் நாட்டினுள் பயன்படுத்தப்படுகின்ற மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி தொடர்பான உபாயத் திட்டங்கள் பற்றி இலங்கை மின் சக்தித் துறையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த உபாயத் திட்டங்களை எமது நாட்டிலும் பின்பற்றுவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தான் தயாராகவிருப்பதாகத் தெரிவித்தார்கள். ஈரான் நாட்டில் தற்பொழுது இயற்கை எரிவாயு வளத்தைப் பயன்படுத்தி மட்டுமன்றி காற்று சக்தி மூலத்தையும் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்த ஈரான் நாட்டு மின்வலு சக்தி அமைச்சர் அவர்கள், ஏற்கெனவே இலங்கையில் காணப்படுகின்ற எரிவாயு வளங்களை அதிகளவில் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது பொருளாதார ரீதியில் மிக முக்கியமானதாக அமையும் என்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.
2017 ஆம் ஆண்டளவில் இலங்கையில் காணப்படுகின்ற சக்தி மூலங்களிலிருந்து கணிசமான அளவு மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளத் துறைக்கு பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஏற்கெனவே திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் சக்தித் துறையில் எதிர்காலத் திட்டங்களை விவரித்து விடய அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அதே போன்று, மின்சார நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வைக் காணும் பொருட்டு, தேசிய ரீதியில் தற்பொழுது பின்பற்றப்படுகின்ற மின்சக்திப் பாதுகாப்பு முறையியல்கள் பற்றி ஈரான் நாட்டு மின்வலு சக்தி அமைச்சர் அவர்கள் இந்நாட்டு விடய அமைச்சருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள்.
இந்த விடயங்களுக்கு மேலதிகமாக, இரு நாடுகளுக்கு இடையில் நிலவுகின்ற இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இந்நாட்டு விடய அமைச்சருடன் மேலும் கலந்துரையாடிய ஈரான் நாட்டு மின்வலு சக்தி அமைச்சர் அவர்கள், இந்த நாட்டின் மீளப் புதுப்பிக்கத்தகு சக்திக் கருத் திட்டங்களுக்கு தனது நாட்டிலிருந்து வழங்க முடியுமான ஆகக் கூடிய உதவி ஒத்தாசைகளை தான் வழங்குவதற்கும் உறுதியளித்தார்கள்