Posted by superadmin in Latest News
குறைந்த அளவான மின்சார வோல்ட் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக கேகாலை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு ஆயிரத்து நான்கு நூற்று தொண்ணூற்றி நான்கு மில்லியன் ரூபா செலவில் ஒரு க்றிட் உப மின்னிலையத்தை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிட்டியுள்ளது என அடிக் கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்ட போது மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்…
‘கிடைக்கக் கூடிய புள்ளி விபரங்களின் படி, 1977 ஆம் ஆண்டு நாட்டின் மின்சார நுகர்வோரின் எண்ணிக்கை தொண்ணூறு ஆயிரத்து ஒன்பதாக இருந்தது. அந்த எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டு அளவில் ஒரு இலட்சத்து தொணணூற்று ஓராயிரத்து மூன்று நூற்று ஒன்று வரையும், அதே நேரம் 2010 ஆம் ஆண்டின் போது நாற்பத்து மூன்று இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து நான்கு நூறு வரையும் அதிகரித்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டில் அதாவது தற்பொழுது ஐம்பத்து மூன்று இலட்சத்து எண்பத்து எட்டு ஆயிரத்து ஏழு நூற்று ஐம்பத்து எட்டு மின்சார நுகர்வோர் காணப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை எதிர்வரும் சிங்களப் புத்தாண்டின் போது ஐம்பது இலட்சம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக நிறுவனங்களையும் சேர்த்துப் பார்க்கின்ற போது இந்த எண்ணிக்கை அறுபத்து இரண்டு இலட்சம் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.
இன்று கேகாலை மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து முப்பத்து ஒன்பது ஆயிரத்து ஒன்பது நூற்று இருபத்து எட்டு மின்சார நுகர்வோர் இருக்கின்றனர். நாங்கள் எதிர்வரும் ஒரு சில நாட்களுக்குள் மேலும் ஆறு ஆயிரத்து எண்ணூறு பேர்களுக்கு மின்சாரத்தை வழங்க ஆயத்தமாகவுள்ளோம். ஆகையால், எதிர்வரும் பெப்ருவரி மாதம் 07 ஆம் திகதி கேகாலை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கஷ்டப் பகுதி கிராமமாகிய பொல்கஸ்வத்தைக் கிராமத்திலுள்ள பிரதேசமான கோனவெலவில் அமைந்துள்ள மிகவும் சிறு குடிசைக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்து, மின்சாரம் தேவைப்படுகின்ற இறுதி வீட்டிற்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிட்டுகின்றது.
இது தவிர, மின்சாரத்தை சேகரிப்பதற்கு, மின்சாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கு இவை எல்லாம் கிடைத்தவுடன் வினைத் திறன் வாய்ந்த ஒரு சேவையை வழங்க வேண்டும். இன்று நாம் தயாராகவில்லை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையை கண்கூடாகக் காண்பதற்கு. அவ்வளவு தூரத்திற்கு இந்த மாபெரும் உட்கட்டமைப்பு வசதியுடன் எமது வாழ்க்கை பின்னிப் பிணைந்து இருக்கின்றது. வேறு எந்த ஒரு உட்கட்டமைப்பு வசதியும் இந்தளவு எமது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்ததாக இல்லை. ஒரு தினத்தில் இருபத்து நான்கு மணித்தியாலமும் ஏதோ ஒரு விதத்தில் மின்சாரம் நுகரப்படுகின்றது. எனவே தொடர்ச்சியான ஒரு மின்சார விநியோகம் இருக்க வேண்டும். 100% வீதம் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் போது அதற்கு ஏற்ற விதத்தில் மின்சாரத்தையும் உற்பத்தி செய்து வழங்க வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் இன்று எம்மை ஆயத்தப்படுத்துகின்றோம்.
இந்த உப மின்னிலையக் கருத் திட்டத்தை மேற்கொள்ளுகின்ற இலங்கை மின்சார சபையின் துணை நிறுவனம் ஒன்றான லங்கா ட்ரான்ஸ்போfமெர் லிமிற்றட் (LTL) கம்பனி இலங்கையில் மட்டும் அன்றி வெளிநாடுகள் சிலவற்றிலும் கூட பல வகையான கருத் திட்டங்களை மேற்கொண்டு நிறைவேற்றும் ஒரு நிறுவனமாக விளங்குகின்றது. இந்தக் கருத் திட்டத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து மிகவும் நெருங்கிய ஒரு தினத்தில் திறந்து வைக்கவும் வேண்டும். அதே போன்று, இந்த உப மின்னிலையத்தைத் தாபிக்கும் பொருட்டு காணியை வழங்கி உதவிய அனைவரும் நன்றி கூற வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வின் போது சபரகமுவ மாகாண சபையின் ஆளும் கட்சியினது பிரதான அமைப்பாளர் கௌரவ ஹர்ஷ சியம்பலாபிட்டிய அவர்களும், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரும், அரசாங்க அலுவலர்களும், மற்றும் பிரதேசத்தில் வசிக்கின்ற பிரதேச வாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.