05 0

Posted by  in Latest News

அரசியல் வாதிகளும், அமைச்சும், இலங்கை மின்சார சபையும், பொது மக்களும், அரசாங்க ஊழியர்களும் என அனைத்துத் தரப்புகளுமே ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த விதத்தில் முழு நாட்டையும் மின்சார வசதிகள் நிறைந்ததாக மிகவும் இலகுவான முறையில் 100% மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்த நாடாக மாற்றியமைக்க முடியும்……

பொலன்னறுவை மாவட்டத்தில் மின்சார வசதிகள் இல்லாமல் ஏறக்குறைய 8000 குடும்பங்கள் இருந்தன. நாங்கள் இந்த மாதம் 12 ஆம் திகதியாகும் போது அந்த 8000 குடும்பங்களுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்போம். களுத்துறை மாவட்டத்தில் மின்சார வசதிகள் இல்லாமல் ஏறக்குறைய 5000 குடும்பங்கள் இருக்கின்றன. பொலன்னறுவை மாவட்டத்தில் 8000 குடும்பங்களுக்கும் 03 மாதம் என்ற ஒரு குறுகிய காலப் பகுதியினுள் மின்சாரத்தை விநியோகிக்க முடிந்தது என்றால், களுத்துறையும் மின்வலு சக்தி பிரதி அமைச்சரின் கடும் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், அதனைப் பார்க்கிலும் இலகுவாக மின்சார வசதியை 100% வீதம் வழங்கக் கூடிய ஒரு மாவட்டமாகும். ஆகையால், பெப்ருவரி மாதம் 28 ஆம் திகதி அளவில் களுத்துறை மாவட்டத்திலும் மின்சார வசதி இல்லாமல் இறுதியாக எஞ்சியிருக்கின்ற வீடுகளுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் திட்டங்களைத் திட்டமிட்டுள்ளோம். அரசியல் வாதிகளும், அமைச்சும், இலங்கை மின்சார சபையும், பொது மக்களும், அரசாங்க ஊழியர்களும் என அனைத்துத் தரப்புகளுமே ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த விதத்தில் முழு நாட்டையும் மின்சார வசதிகள் நிறைந்ததாக மிகவும் இலகுவான முறையில் 100% மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்த நாடாக மாற்றியமைக்க முடியும் என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

களுத்துறை மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற தேசிய மின்சாரக் கருமப் பணி தொடர்பில் களுத்துறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்…

எமது நாட்டில் தற்பொழுது 98% வீதமான மக்களுக்கு நாம் மின்சார வசதியை வழங்கியுள்ளோம். மேலும் எஞ்சிய 2% வீதமான மக்களுக்கும் நாம் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்போம். வீட்டிற்கு அருகில் மின்சாரம் வந்தும், மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத சில மக்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரக் கஷ்டங்களினால் தான் அவர்கள் மின்சாரத்தைப் பெறுவதற்கு முன்வருவதில்லை. அவர்களின் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் மின்சார ஒளியில் தமது பாடப் புத்தகங்களை வாசிப்பதற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் ஆசைப்படுகின்றார்கள். அதனால் தான் நாங்கள் இந்த மின்சாரம் வழங்கும் கருமப் பணியை ஆரம்பித்தோம். இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு கருமப் பணி என்று கூறுவதும் அதற்காகத் தான். இதன் நிமித்தம் பல்வேறுபட்ட காலப் பகுதிகளில் பல முயற்சிகளை மேற்கொண்டோம். இதற்கு முன்னர் சமுர்த்தி அதிகார சபையின் மூலம் ஒரு கடன் தொகை பெற்றுக் கொடுக்கப்பட்டது. அதில் இருந்து கிடைத்தது மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான நிதித் தொகை மாத்திரமாகும். ஆயினும், தமது வீடுகளுக்கு மின்சாரக் கம்பியிணைப்பு முறைமையை நிறுவிக் கொள்வதற்கான பொருளாதார சக்தி இல்லாத மக்களும் இருக்கின்றனர். ஆகவே தான் இந்தத் தடவை நாங்கள் வீடுகளுக்கு மின்சாரக் கம்பியிணைப்பை நிறுவிக் கொள்ளும் வகையிலும் மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் 40,000 ரூபா சலுகைக் கடன் தொகை ஒன்றை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானித்தோம். இந்தக் கடனைப் பெற்றுக் கொள்வதும் அதனைச் செலுத்தித் தீர்ப்பதும் மிகவும் இலகுவானதாகும். பிணையுத்தரவாதிகள், காணி உரித்துடையவர்கள் என்ற கடும் நிபந்தனைகள் ஏதும் இந்தக் கடனைப் பெற்றுக் கொள்வதற்கு தேவைப்பட மாட்டா.

பொலன்னறுவை மாவட்டத்தில் இது வரை மின்சார வசதியைப் பெறாத சுமார் 8000 குடும்பங்கள் இருக்கின்றன. இந்த அனைத்துக் கருமங்களினதும் அடி்பபடையாளர் எமது மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே. அவர்களின் கரங்களினால் இந்த 8000 குடும்பங்களுக்கும் இந்த மாதம் 12 ஆம் திகதி மின்சாரம் வழங்கப்படும். நாங்கள் இலக்கு வைத்திருப்பது பொலன்னறுவை மாவட்டத்தில் மின்சார வசதியில்லாத இறுதியாக எஞ்சியிருக்கின்ற குடும்பங்களுக்கும் மின்சாரத்தை வழங்குவதற்காகும். 03 மாதங்கள் போன்ற ஒரு குறுகிய காலப் பகுதியினுள் நாங்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் ஏறக்குறைய 8000 மின்சார இணைப்புகளை வழங்கி, இந்த மாவட்டத்தில் 100% வீதம் மின்சாரத் தேவையை எம்மால் பூர்த்தி செய்ய முடிந்தது எனவும் குறிப்பிட்டார்கள்.