04 0

Posted by  in Latest News

நாங்கள் இன்று தயாராகுவது ஒரு தேசிய அரசாங்கத்தின் கீழ் நாட்டை முன்னேற்றுவதற்கு. கட்சி மற்றும் அரசியல் வரையறைகளினுள் செயற்பட்டாலும், நல்ல விடயங்களுக்காக கட்சி பேதம் இன்றி நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த புதிய பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எமக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. அன்றில் இருந்து நாம் வேறுபட்ட பிரிவினவாத ஒரு அரசியலைச் செய்தவர்கள். நன்மையான விடயங்களுக்காவது நாம் ஒன்று சேரவில்லை. முன்னர் எந்தக் கட்சியில் இருந்து ஒருவர் அடிக் கல்லை நாட்டினாலும், எதிர் கட்சியினர் கூறுவார்கள் அது எவ்வளவு காலத்திற்கு நிலைக்கப் போகுகின்றது என்று. எனினும், இன்று அப்படி இருக்க முடியாது. நாங்கள் இன்று கட்சி பேதங்கள் இல்லாமல் அனைவரதும் பொறுப்பை உணர்ந்து இந்த அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கின்றோம். நாங்கள் இன்று இறங்கியிருப்பது கிராமங்களும், மாவட்டங்களும் மற்றும் முழு நாடும் ஒன்றாக இணைந்து முன்னேறிச் செல்லும் ஒரு பயணத்திலாகும் என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

கேகாலை மாவட்டத்தில் சில வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக அடிக் கல் நாட்டும் வைப நிகழ்வில் கலந்து கொண்ட போதே கெளரவ அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் ‘ஐ ரோட்’ (I Road) என்ற கருத் திட்டத்தின் கீழ் இரண்டு வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக கெளரவ அமைச்சர் அவர்களினால் இதன் போது அடிக் கல்கள் நாட்டப்பட்டன. இந்த அடிக் கல்கள் நாட்டப்பட்டதற்கு இணங்க இரண்டு வருட காலப் பகுதியினுள் தெரனியாகலப் பிரதேச செயலாளர் பிரிவின் மாலிபொட – மாகல வீதியினதும் மற்றும் தெரனியாகல வைத்தியசாலைக்கு அருகில் இருந்து திக்வெல்ல திகன வீதியினதும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்….

உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்திப் பணிகளுக்கு இடையில் மிகவும் முக்கியமான அங்கமாக விளங்குகின்றன. இது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கருத் திட்டமாகும். இன்று, மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சி காலத்தில் இது முன்னெடுக்கப்படுகின்றது. எமக்கு பொறுப்பு இருக்கின்றது இந்த மாவட்டத்தின் மக்களை மாத்திரம் அன்றி முழு நாட்டு மக்களையும் கட்டியெழுப்புவதற்கு. அதற்காகத்தான் நாங்கள் இவ்வாறு பாடுபடுகின்றோம். நாங்கள் மாவட்டத்தின் அபிவிருத்திற்கு, நாட்டின் அபிவிருத்திற்கு ஏதாவது ஒன்றைச் செய்தோம் என்று சந்தோஷப்படுவதற்காகவே நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம் எனவும் குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் பொதுத் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சருமான கெளரவ கபீர் ஹசீம் அவர்களும், நீதி மற்றும் புத்தசாசன விவகாரங்கள் பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால அவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் கெளரவ ரன்ஜித் பொல்கம்பொல அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் துஷித்தா விஜேமான்ன அவர்களும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா அவர்களும் மற்றும் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.