31 0

Posted by  in Latest News

o வினைத்திறன் வாய்ந்த மின்சார சேவையின் ஊடாக மின்சார நுகர்வோருக்கு சலுகை

ரன்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர்

தமது வீடுகளுக்கு இது வரை மின்சார வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்ற குறைந்த வருமானமுடைய மக்களுக்கு சலு விலை அடிப்படையில் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரத்தை வழங்கும் ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற தேசிய மின்சாரக் கருமப் பணி நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சனவரி மாதம் 31 ஆம் திகதியாகும் போது முழு நாடும் மின்சாரத்தில் சுய தேவை பூர்த்தியடையும். இதன் நிமித்தம் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் அறிவுரைகளினதும் வழிகாட்டல்களினதும் அடிப்படையில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சு ஒன்றிணைந்து ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.
சராரியாக நோக்கும் போது ஏறக்குறைய இருபது இலட்சம் மக்கள் தத்தமது வீடுகளுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தேவை இருந்தும், பொருளாதாரக் கஷ்டங்களின் காரணமாக மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது போன குடும்பங்கள் அனைத்துக்கும் 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் திகதியாகும் போது மின்சாரத்தை வழங்கும் பணி நிறைவடைய இருப்பதால், எமது நாடு மின்சாரத்தில் சுய தேவை பூர்த்தியுடையதாக மாறிவிடும். இதன் முதல் கட்டமாக பொலன்னறுவை மாவட்டத்தில் சனவரி மாதம் 12 ஆம் திகதி அளவில் 100% வீத மின்சார வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
மின்சாரத்தில் சுய தேவைப் பூர்த்தி போல், வினைத் திறன் வாய்ந்த மின்சார சேவை, தொடர்ச்சியான மின்சார விநியோகம், சுய தேவைப் பூர்த்தியுடைய மின்னுற்பத்தி என்பவற்றினூடாக, இறுதியில் மின்சார நுகர்வோருக்கு மிகவும் சிறந்த மின்சார விநியோகத்தை வழங்குதல் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கின்ற பிரதான நன்மையாகிய மின்சாரக் கட்டணக் குறைப்பு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியன அமைச்சின் குறிக்கோள்களாகும்.