Posted by superadmin in Latest News
● 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் திகதி அளவில் முழு நாட்டிற்கும் 100% வீத மின்சாரத்தை வழங்கும் ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற தேசிய கருமப் பணியின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் 100% வீதம் மின்சாரத்தை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தெரிவித்தார்கள்.
திம்புலாகல எல்லவெவ பிரதேசத்தில் நடைபெற்ற ‘முழு நாட்டிற்கும் ஒளி – இருள் நீங்கும்’ என்ற தேசிய கருமப் பணி தொடர்பான முற்போக்கு மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
இதன் போது உரிய பணிகளை விரைவில் நிறைவேற்றுமாறு அறிவுரைகளை வழங்கிய கெளரவ அமைச்சர் அவர்கள் 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதி அளவில் இந்த இலக்கை அடைவதற்கு எதிர்பார்ப்பதாகவும், தற்பொழுது செயன்முறை ரீதியான பிரச்சினைகள் எழுந்துள்ள பிரிவுகள் தொடர்பில் துரித தீர்வுகளை மேற்கொண்டு, குறித்த பணிகளை நிறைவேற்றுமாறும் மேலும் கேட்டுக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் தலைவர் திரு அனுர விஜயபால, பொது முகாமையாளர் திரு என்.சி. விக்ரமசிங்க ஆகியோர் அடங்கலாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் பலரும், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் உட்பட பிரதேசத்தின் அரசியல்வாதிகளும், அரசாங்க ஊழியர் பலரும் கலந்து கொண்டனர்.