27 0

Posted by  in Latest News

o மூன்று மாத காலத்திற்குள், கள்ளத்தனமாக மின்சாரம் பாவிக்கப்பட்ட சம்பவங்கள் நானூற்று ஐந்து

o அமைச்சரின் கட்டளையின்படி .மி.. திடீர் சோதனைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது

இலங்கை மின்சார சபையை இலங்கையின் சேவைகளை வழங்கும் வினைத் திறன் வாய்ந்ததும் தரமானதுமான நிறுவனங்களுக்கு மத்தியில் முதல் தர நிறுவனமாக மாற்றும் பொருட்டு மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு இணையாக, மோசடியாக மின்சாரத்தைப் பாவிப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு இ.மி.ச. மூலம் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற முன்னெடுப்புத் திட்டம் ஏற்கெனவே மிகவும் வெற்றிகரமான முறையில் செயற்பட்டு வருவதாக மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இந்த ஆண்டு யூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய கடந்த மூன்று மாதங்களின் போது இலங்கை மின்சார சபையின் திடீர் சோதனைப் பிரிவினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் மூலம், சட்டத்திற்கு முரணாக கள்ளத்தனமாக மின்சாரம் பாவிக்கப்பட்ட 405 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத் தண்டப் பணமாக இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான (ரூ.2,848,000) தொகையொன்று அறவிடப்பட்டுள்ளது. முழுமொத்த வருமானம் முப்பத்து எட்டு இலட்சத்து முன்னூற்று தொண்ணூற்று எட்டு ஆயிரத்து முன்னூற்று தொண்ணூறு ரூபா ஐம்பத்து நான்கு சதம் (ரூ.38,398,390.54) எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையை இலங்கையின் சேவைகளை வழங்கும் வினைத் திறன் வாய்ந்ததும் தரமானதுமான நிறுவனங்களுக்கு மத்தியில் முதல் தர நிறுவனமாக மாற்றுவது தனது அமைச்சுப் பதவியின் அடிப்படைப் பொறுப்பாகும் என்று கூறிய மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நிறுவனத்தினுள்ளும் அதற்கு வெளியாலும் முறையான ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்கள்.

மின்சார மாணிவாசிப்புக் கருவிகளைக் கள்ளத்தனமாகப் பொருத்துதல், அந்த மாணிவாசிப்புக் கருவிகளினுள் கொக்கிகள் போன்ற சாதனங்களைத் திணித்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதால் இலங்கை மின்சார சபைக்கு கணிசமான நிதி நட்டம் ஏற்படுவதாக மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இவ்வாறு சட்ட விரோதமான முறையில் மின்சாரத்தை நுகர்ந்து, இலங்கை மின்சார சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தைத் தடுக்கின்ற நபர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன்கொண்டு வரும் பொருட்டு நாடளாவிய ரீதியில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் உரிய தரப்புகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். வீட்டு, கைத்தொழில், வர்த்தகப் பிரிவுகளில் நுகர்வோரினால் மேற்கொள்ளப்படுகின்ற மின்சார மாணிவாசிப்பு மோசடிகள் தொடர்பான தகவல்கள் ஏதும் தெரிந்தால் 1987 என்ற இலக்கத்தை அல்லது 011 2422259என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் இ.மி.ச. திடீர் சோதனைப் பிரிவுக்கு அறியப்படுத்துமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்ட மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர், அந்தக் கரும விடயத்தை ஒரு தேசிய பொறுப்புப் பணியாகக் கருவதாகவும் குறிப்பிட்டார்கள்.