25 0

Posted by  in Latest News

● கதிரியக்கத்தின் தாக்கத்தினால் இது வரை இலங்கை வாழ் மக்கள் பலர் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். இது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கதிரியக்கத்தின் தாக்கத்திலிருந்து இலங்கையைப் பாதுகாக்கும் நிமித்தம் எதிர் வரும் ஆண்டின் சனவரி மாதத்திலிருந்து அணு சக்தி அதிகார சபையின் மூலம் அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் புதிய ஒரு முறையியலை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ‘அதே போன்று, கதிரியக்கம் பற்றிய சட்டத்தை மீறி செயல்படும் தரப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுத்து கடும் தண்டனையை விதிக்குமாறு உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கவும் படும்’ என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.
கடந்த தினத்தில் அணு சக்தி அதிகார சபைக்கும் மற்றும் அணு சக்தி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கும் சுற்று விஜயத்தை மேற்கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்……

‘ஏற்கெனவே நாட்டில் செயற்படுத்துவது இந்த ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட கதிரியிக்கம் பற்றிய சட்டமாகும். எனினும், இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட, ஏற்கெனவே நாட்டில் கதிரியக்கம் தொடர்பில் பாதகமான ஒரு சூழ்நிலையே நிலவுகின்றது. ஆதலால், எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், பால் மாவு முதலிய நுகர்வுப் பொருட்களையும் மற்றும் ஏனைய பொருட்களையும் கடுமையாக பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதனூடாக எதிர்காலத்தில் இலங்கையை கதிரியக்கம் நீங்கிய ஒரு வலயமாக மாற்றும் பொருட்டு அணு சக்தி அதிகார சபை மற்றும் அணு சக்தி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு ஆகியவற்றின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனவும் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வின் போது, மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சார கெளரவ பி. அஜித் பெரேரா அவர்களும், அணு சக்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.