Posted by superadmin in Latest News
● அரசியல் அதிகாரத் தரப்புகளினால் பெயர் குறிக்கப்பட்டாலும், நிறுவனங்களுக்கான தலைவர்களையும், பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் நியமிக்கும் போது தகைமைகளைப் பரிசீலிப்பதற்கான ஒரு விஷேட குழு இருப்பது அவசியம்
எமது நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கு தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரின் நியமனம் தகைமைகளைத் தேடிப் பார்க்காமல் மேற்கொள்ளப்பட்டிருந்த காலம் இருந்தது. ஆயினும், இன்று அவ்வாறு பெயர் குறிக்கப்படுவதன் மூலம் அத்தகைய நியமனங்கள் இடம்பெறுவதில்லை. அரசியல் அதிகாரத் தரப்புகளினால் பெயர் குறிக்கப்படுவது என்பது பொதுவாகக் காணக் கூடிய ஒரு விடயமாகும். எனினும், எவராக இருந்தாலும் அவர் பதவிக்கு அவசியமான தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒரு விஷேட குழுவின் மூலம் ஆராய்ந்து பார்க்கப்படும். அலசி ஆராய்ந்து மிகவும் வெளிப்படைத் தன்மையிலேயே அத்தகைய நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு அலசி ஆராய்ந்து இலங்கை மின்சார தனியார் கம்பனிக்கு தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இலங்கை மின்சார தனியார் கம்பனிக்கு புதிய தலைவராக, சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான திரு லால் குணசேக்கர அவர்களை நியமிக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட நேரத்திலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள் … ‘நீங்கள் மிகவும் சிறந்த ஒரு பயணத்தில் பயணித்துள்ளீர்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே அந்தப் பயணத்தை கூட்டாகவும், விரைவாகவும் அதே போன்று வெற்றிகரமாகவும் தொடர வேண்டும். இலங்கை தனியார் மின்சாரக் கம்பனியின் முக்கிய குறிக்கோளாக விளங்குவது யாதெனில் வினைத் திறன் வாய்ந்த ஒரு சேவையை வழங்குவதாகும். இது வரை 98% வீதமான மக்களுக்கு மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று தேவைப்படுவது யாதெனில் மின்சாரத் துண்டிப்புகளின்றி ஆகக் குறைந்தது 24 மணித்தியாலமும் தொடர்சியாக தரமான மின்சாரத்தை விநியோகிப்பதாகும். இந்த நோக்கத்தை அடைய வேண்டுமானால் கூட்டாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று இணையற்ற பல பொறுப்புக்களைக் கொண்டுள்ளன. இந்த அனைத்து நிறுவனங்களுமே ஒரே குறிக்கோளுடன் செயல்படுவதால் கூட்டுறவையும் அதே போன்று பரஸ்பர ஒத்துழைப்பையும் வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இலங்கையில் மிகவும் பிரபல்லியமான பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்கும் பொறுப்பை இலங்கை தனியார் மின்சாரக் கம்பனி ஏற்றுள்ளது. மேலும், அனைவரினதும் ஒத்துழைப்புடன் புதிய நிர்மாணங்கள் தொடர்பிலும் கவனத்தைச் செலுத்தி இந்த லெகோ நிறுவனத்திற்கு மிகவும் வெற்றிகரமான முறையில் வினைத் திறன் வாய்ந்ததாக எதிர்கால பயணத்தைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிட்ட வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வில் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, இ.மி.ச. தலைவர் திரு அனுர விஜேபால, பொது முகாமையாளர் திரு என்.சி. விக்ரமசேக்கர, அமைச்சரின் ஆலோசகர் திரு டப்ளியூ.பீ. கனேகல ஆகியோர் அடங்கலாக இலங்கை தனியார் மின்சாரக் கம்பனியின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.