Posted by superadmin in Latest News
Infotel 2015 இரண்டாம் நாள் காட்சியைத் திறந்து வைத்து அமைச்சர் சியம்பலாபிட்டிய நிகழ்த்திய உரை.
Infotel 2015 இரண்டாம் நாள் காட்சி மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கெளரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள், இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் உலகத்திலேயே பேசப்படும் அளவுக்கு மதிக்கப்பட்டுள்ளது எனவும், அந்த முயற்சியில், உலகத்தில் மிகவும் சிறந்த கிராமிய தகவல் தொழில் நுட்பக் கருத்திட்டத்திற்கான பில் என்ட் மிலின்டா கேய்ட்ஸ் விருது (Bill & Melinda Gates Award) 2014 ஆம் ஆண்டு எமது நாட்டிற்குக் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்கள்.
இன்று எமது பாடசாலைகளில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பங்களை சிறந்த முறையில் மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு செய்யப்பட்டதால், இலங்கையில் கணினியின் பாவனை சாதனை உயர்ந்த மட்டத்திலுள்ளது. இன்று இது சுமார் 40% வீதம் அளவில் காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதே போன்று எதிர்கால நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக ஆக்கிக் கொள்வதற்கும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புவதாகவும், அதே போன்று தொழில் நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வில் பொது நிருவாக முகாமைத்துவ அமைச்சர் கெளரவ ரன்ஜித் மத்தும பண்டார அவர்களும் கலந்து கொண்டார்கள்.