இலங்கை மின்சார சபையின் ஊடாக மேலும் விமலசுரேந்திரர்களை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
17 0

Posted by  in Latest News

ஒரு நிறுவனத்தின் முன்னேற்றம் தங்கியிருப்பது திருப்திகரமான ஊழியர்களின் அடிப்படையிலாகும்.

இந்த நாட்டிற்கு மிக அவசியமான உட்கட்டமைப்பு வசதியாகிய மின்சாரத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நிமித்தம் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களாகிய உங்களை சந்தித்துப் பேசுவதில் நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றேன்.

.மி.. ஊடாக மின்சார நுகர்வோருக்கு உச்சளவில் வினைத் திறன் வாய்ந்த ஒரு சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆகுசெலவு குறைந்த முறையியல்களை உருவாக்க வேண்டும்.

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர்

நான் நினைக்கின்றேன் ஒரு நிறுவனத்தின் முன்னேற்றத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கியமான காரணிதான் திருப்திகரமான ஊழியர்கள் என்று. திருப்தியான பூரண ஊழியர்களால்தான் ஒரு நிறுவனம் முன்னேற்றத்தை அடைய முடியும். ஆகையால், நான் எதிர்பார்க்கின்றேன் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் அனைவரும் சகோதரத்துவத்தை மதித்து, ஒன்றாக இணைந்து நட்புடன் இந்தத் துறையில் பணியாற்றுவார்கள் என்று. எங்களுடைய மாபெரும் வளம்தான் நிறுவனத்திலுள்ள மிகவும் திறமை வாய்ந்த மனித வளம். அதே போன்றுதான் எமக்கு இருக்கின்ற இந்த மிகத் திறமை வாய்ந்த மனித வளங்கள் மத்தியில் மேலும் விமலசுரேந்திரர்கள் இருப்பார்கள் என்பது. நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். நாங்கள் அந்த வளங்களை இனங்கண்டு எதிர்கலத்தில் பயன் பெற வேண்டும். அந்த வளங்களின் ஊடாக நிறுவனத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தெரிவித்தார்கள்.
இலங்கை மின்சார சபையில் நிகழ்ந்த விமலசுரேந்திர அவர்களின் நினைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு இணையாக அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களும், மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்களும் தத்தமது பதவிகளில் பணிகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபையில் இடம்பெற்ற முதலாவது அவதானிப்பு விஜயத்திலும் கலந்து கொண்டார்கள்.
இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்…,
‘நீங்கள் நன்றியுடைய மனிதர்களாக மாற வேண்டும். பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். இந்த எண்ணக்கருவை உருக்கியிருப்பது அவர்கள்தான். இதன் மூலம் பொருளாதார நன்மைகள் ஏதும் கிடையாது. ஆயினும் நன்றி உணர்வு மனிதனில் இருக்க வேண்டிய ஒரு குண அம்சமாகும். பொதுவாக மக்கள் ஏதாவது நன்மைகள் கிடைக்கா விட்டால், அனைத்தையும் மறந்து நன்றியற்றவர்களாக மாறி விடுகின்றார்கள். சமூகம் என்றால் அப்படித்தான். சனவனி 08 ஆம் திகதி நான் தொலைத்தொடர்புகள் அமைச்சர். 09 ஆம் திகதி நான் பாராளுமன்ற உறுப்பினர். இன்று நான் அமைச்சரவை அந்தஸ்து உடைய அமைச்சர் ஒருவர். இந்த ஒவ்வொரு காலத்தின் போதும் கிடைக்கின்ற நன்மைகளுடன் சமூகத்தில் காணப்படுகின்ற பல விதமான சம்பிரதாயபூர்வ நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது நன்றி உணர்வுடைய நபர்களாக இருப்பது அவசியமாகும். விமலசுரேந்திர அவர்கள் 1918 ஆம் ஆண்டு நீர் மின்னுற்பத்தி தொடர்பான ஒரு அறிக்கையை பொறியியலாளர்கள் சங்கத்திற்கு சமர்ப்பித்திருந்தார். 1950 ஆம் ஆண்டளவில் லக்‌ஷபான மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் ஆரம்பமாகின. அவர் நாட்டிற்கு ஒரு ஆக்கபூர்வமான தலைமைத்துவத்தை வழங்கிய ஒருவர். ஆதலால் அத்தகைய ஒரு மா மனிதரை நினைவு கூறுவது என்பது மிக முக்கியமான கருமமாகும்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதமரும் எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதே போன்று சிக்கல் வாய்ந்த ஒரு அமைச்சையும் ஒப்படைத்துள்ளார்கள். இந்தத் துறை எனக்கு புதிய ஒரு துறையாகும். நாட்டி மிகவும் அவசியமான உட்கட்டமைப்பு வசதியாகிய மின்சாரத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற உங்களை சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையை இட்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். அதே போன்று அதனை ஒரு பாக்கியமாகவும் கருதுகின்றேன். மின்சார விநியோகத்தை தரமானதாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான ஒரு விஷேட வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இலங்கை மின்சார சபையில் இருந்து மக்கள் எப்பொழுதும் கடுமையான வினைத் திறனை எதிர்பார்க்கின்றனர். அந்த சவாலுக்கு நாங்கள் முகம்கொடுக்க வேண்டும். அதே போன்று செலவுகளைக் குறைப்பதற்கும் தேவையான திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டும். இந்த விடயங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் அனைவரும் சகோரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும்.

Leave a comment

* required