Posted by superadmin in Latest News
எமது நாட்டில் பல எண்ணிக்கையான தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியாக பல கட்சிகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டுக் காணப்படுகின்றன. ஆயினும்,அத்தகைய பல வித்தியாசமான அரசியல் நோக்கங்களுடன் நாங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் இன்றைய அரசியலில் பேதங்களை மறந்து அத்தகைய பல விதமான நோக்கங்களை ஒன்றிணைத்து முன்னோக்கி நகர்வதற்கான ஒரு தளம் எமக்கு உருவாகியுள்ளது என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்கள்.
அந்த சந்திப்பின் போது மேலும் கருத்துத் தெரிவித்த சியம்பலாப்பிட்டிய அவர்கள் ‘இந்த அமைச்சுடன் இணைவதற்கு எமக்குக் கிடைத்ததையிட்டு ‘நாங்கள் பெருமைப்படுகின்றோம். நீங்கள் இந்த நாட்டின் முன்னேற்ற பயணத்திற்கு கடுமையாக உழைத்த சகோத ஊழியர்கள். ஏற்கெனவே 98% வீதமான மின்சார வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று எமது நாட்டில் 24 மணித்தியாலமும் தொடர்ச்சியாக இடையறாது எமக்கு மின்சாரம் கிடைக்கின்றது. அது போன்ற பாரிய பங்களிப்பைச் செய்கின்ற உங்களுக்கும் அதே போன்று எங்களுக்கும் முன்னேறிச் செல்வதற்கு பாரிய பல இலக்குகள் இருக்கின்றன. அந்தப் பயணத்தின் போது அதிகளவான பங்களிப்பும், பொறுப்பும் மற்றும் கடமையும் இருப்பது உங்களுக்கு’.
‘தொழிற்சங்கத்தின் அடிப்படை விடயமான உங்களது தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தல், உங்களது நிறுவனங்களைப் பாதுகாத்தல் போன்றது போல் அதற்கும் அப்பால்பட்ட தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு நாம் நாட்டின் பொறுப்புடைய பிரஜைகளாக மாற வேண்டும். நாம் இன்றைய அரசியல் மேடைகளில் எல்லாம் உச்ச பலனை அடைந்து முன்னேறிச் செல்வோம் என உங்களை நான் அழைப்பு விடுக்கின்றேன்’ எனவும் கூறினார்கள்.
இந்த நிகழ்வில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ அஜித் பி. பெரேரா மற்றும் இந்த அமைச்சின் இணை நிறுவனங்களினது தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அயராது உழைப்போர் ஆகியாரும் கலந்துகொண்டனர்.