சரியான கொள்திறனில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
19 0

Posted by  in Latest News

மின் சக்த்தியில் சுய தேவைப் பூர்த்தியை நோக்கி இலங்கையை நகரச்

செய்யும் பயணத்தில், கணிய எண்ணெய் வளங்களின் பாவனையைக்

குறைத்து, மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் பால் நகரும்

இலக்கை அடையும் பொருட்டு, தேசிய மின்சார முறைமைக்கு மீளப்

புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களில் இருந்து கிடைக்கின்ற பங்களிப்பை

அதிகரிக்கும் ஒரு வேலைத் திட்டம் தயாரிக்கப்படும் என மின்வலு

மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தெரிவித்தார்கள்.

அதற்கு ஏற்ப, இலங்கையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற

சூரிய சக்தி, காற்றுமூல சக்தி மற்றும் சிறிய நீர்வலு முதலிய மீளப்

புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும், மீளப்

புதுப்பிக்கத்தகு சக்தி வளக் கருத்திட்டங்களை உருவாக்குவதற்கும்

தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இறுதியளவில்

இலங்கையின் மின்னுற்பத்தியை 100% வீத அளவுக்குக் கொண்டு

வருவதற்கும், அந்தக் கரும நடவடிக்கையில் பிரதான மின்சார

முறைமைக்குப் பிரவேசம் இல்லாத கஷ்டப் பிரதேசங்களில்

அமைந்துள்ள வீடுகளுக்கும் இடையூறுகள் இன்றி மின்சார

விநியோகத்தை வழங்க முடியும் எனவும் அமைச்சர் மேலும்

தெரிவித்தார்.

குறிப்பாக, இவ்வாறு மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் உபாயத்திட்ட

முறைகளின் பால் நகர்வதன் மூலம் மின்சக்தித் துறைக்கு நிரந்தர

தீர்வுகள் கிட்டுவது மாத்திரமன்றி, பூகோள வெப்பநிலை அதிகரித்து

அதன் மூலம் நிகழும் காலநிலை மாற்றங்களுக்கும் தீர்வுகள்

கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று முழு உலகமும் கணிய எண்ணெய் அரிதாகிப் போகுகின்ற ஒரு

நிலைக்கு முகம்கொடுத்து வருகின்றது. ஆகையால் மீளப்

புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களின் பால் நகர வேண்டிய கட்டாயத்

தேவை இன்று எழுந்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் காபன் நீங்கிய

ஒரு உலகத்திற்கு உரிமை பாராட்டுவதற்கும், நாளாந்தம் அதிகரித்து

வருகின்ற மின்சாரத் தேவைக்கு ஏற்ப தரமான மற்றும் தொடர்ச்சியான

மின்சார விநியோகத்தை ஆகக் குறைந்த செலவில் பெற்றுக்

கொள்வதற்கும் அவசியமான மீளப் புதுப்பிக்கத்தகு சக்தியை

வியாபிக்கச் செய்வதற்குரிய கொள்கைகளையும் மற்றும்

உபாயத்திட்ட முறைகளையும் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை

எடுக்கப்படும் எனவும் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி

வளங்கள் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலபிட்டிய அவர்கள் மேலும் சுட்டிக்

காட்டினார்கள்.

cropped-human-hand-holding-a-city

Leave a comment

* required