புதிதாக தாபிக்கப்பட இருக்கின்ற மின்னுற்பத்தி நிலையங்களை மின்சக்தி முகாமைத்துவத்தின் ஊடாக குறைத்துக் கொள்ள முடியும்
19 0

Posted by  in Latest News

எனது அமைச்சின் கீழுள்ள முக்கியமான ஒரு நிறுவனம் தான் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை. அதே போன்று, மின்சக்தி முகாமைத்துவம் எனும் போது அதுவும் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். மின்சாரத்தை மின்சார நுகர்வோருக்கு வழங்கும் போது அரசாங்கம் என்ற ரீதியில் பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடும். அது தான் ஆகக்குறைந்த ஒரு விலையில் மின்சாரத்தை விநியோகிப்பது. நிறுவனம் ஒன்று என்ற ரீதியில், மின்சாரத்திற்குச் செலவாகும் செலவுகளைக் குறைக்க வேண்டும். பலரும் பேசும் விடயம் தான் நாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் தேவை, அதனை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது. ஒரு அரசாங்கம் என்ற ரீதியில், அதற்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது மின்சாரம் விநியோகிக்கப்படும் கரும விடயத்தை உறுதிசெய்து கொள்வது அந்தப் பொறுப்பு. ஆதலால் மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நாம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றோம். ஆயினும், நாட்டின் மின்சக்தி முகாமைத்துவத்தின் ஊடாக நாட்டிற்குத் தேவையான மின்சார அலகுகளின் அளவுகளை சேமித்துக் கொள்ள முடியும். இவ்வாறு சேமிப்பதால் புதிதாக அமைக்கப்படும் மின்னுற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள முடியும். என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரனி பி. அஜித் பெரேரா அவர்கள் தெளிவுபடுத்திக் கூறினார்கள்.

விமானப் படை முகாம்களில் மின்சக்தியைச் சேமித்துப் பாதுகாக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள விமானப் படையின் சக்தி முகாமையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமானப் படை முகாமில் நேற்று நிகழ்ந்த வைபவ விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பி. அஜித் பெரேரா….
‘நாங்கள் மின்சாரத்தை வீணாக்கும் ஒவ்வொரு வினாடிக்கும் வெளிநாட்டவர்களுக்கு எங்களது தேசிய மூலதனமும் சொத்தும் செலவாகுகின்றன. ஆகையால், மின்சாரத்தை சேமிப்பது என்பது இந்த நாட்டில் நாட்டுப்பற்றுடைய ஒருவரின் கடமையாகும். நீங்கள் இந்த நாட்டிற்காக இரத்தம் சிந்திய, உயிர்களைத் தியாகம் செய்த வீரர்கள். இப்பொழுது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆயினும் எமக்கு இராணுவ சக்தி அவசியம். இராணுவ சக்தியை நாம் பேணிச் செல்லும் போது நாட்டிற்கு அவசியமான உச்சளவு பங்களிப்புக் கிடைக்கும் வகையில் பேணிச் செல்வது உங்களது பொறுப்பும் கடமையுமாகும். அதற்கான திட்டங்களைத் தயாரித்து வழங்குவது அரசியல் வாதிகளான எங்களது பொறுப்பாகும். இந்த நாட்டின் மின்சக்தியை சேமிப்பதற்கு நீங்கள் முன்வந்திருக்கின்றமை, உங்களின் நாட்டுப்பற்றை மீண்டும் ஒரு முறை பிரதிபலிக்கின்றது. சேமிக்கும் ஒவ்வொரு மின்சார அலகுக்கும் இந்த நாட்டிற்கு ஏதாவது சேமிப்பு கிடைக்கின்றது. இதனால் நாடு வளம் பெறும். உங்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதாவது சேமிப்பு கிடைக்கும்.

இந்தப் பாடநெறியின் ஊடாக நாட்டில் காணப்படும் மிக விசாலமான விமானப் படை முகாமாகிய இந்த முகாமில் மின்சாரம் வீணாதலைக் குறைக்க முடியுமாயின், அது எங்களது அமைச்சு அடைந்த வெற்றியாகும். குறிப்பாக மின்சாரம் வீணாகும் பிரதான மார்க்கம் தான் காலாவதியாகிய மின்சார உபகரணங்களையும் மற்றும் வினைத்திறனற்ற நியமம் குறைந்த மின்னுபகரங்களையும் பாவிப்பது. அத்தகைய குறைபாடுடைய மின்னுபகரணங்களை இனங்காணுவதற்கும் இந்தப் பாடநெறி மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்கும். இதன் ஊடாகத்தான், ஆகக்குறைந்த செலவில் அதிக பலன்களைப் பெற்றுத் தரும் மின்சக்தி முகாமைத்துவ வேலத் திட்டம் ஒன்றிக்கு எம்மால் நகர முடியும் எனவும் குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமானப் படைத் தளபதி கமான்டர் திரு பத்திரண, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு எம்.எம்.ஆர். பத்மசிறி ஆகியோர் அடங்கலாக மின்சக்தி முகாமையாளர்கள் மற்றும் விமானப் படையின் அதிகளவான அலுவலர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required