‘மின்சக்தி நிறைந்த ஓர் நாடு’ 10 ஆண்டுத் திட்டம்
31 0

Posted by  in Latest News

‘மின்சக்தி நிறைந்த ஓர் நாடு’ என்ற மின்சக்த்தித் துறையின் 10 ஆண்டு அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கூட்டம் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் அழைப்பில் பேரில், பிரதமர் கெளரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில், உரிய துறையுடன் சம்பந்தப்பட்ட கல்விமான்களின் பங்குபற்றலில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

‘மின்சக்தி நிறைந்த ஓர் நாடு’ என்ற தலைப்பில் மின்வலு சக்தி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் நிரல் அமைச்சுக்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தனியார் துறையினர் ஆகிய தரப்புகளின் பங்களிப்பில், 2025 ஆம் ஆண்டு வரை செயல்வலுப்பெறும் வகையில் செயல்முறை ரீதியான ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மின்சக்தித் துறையின் 08 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என அமைச்சு தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,

‘குறித்த இந்த மின்சக்தி அபிவிருத்தித் திட்டம் மின்சக்தியை சேமிக்கும் அடிப்படையில் அமைந்ததாகும். இது எமது நாட்டிற்கு மிகவும் அவசியமாகும். அரசாங்கம் நிலைக்கும் தன்மை, மின்சாரத்தின் நிலைக்கும் தன்மை ஆகியவற்றை நோக்கி எமது அபிவிருத்தி அமைய வேண்டும் என்றளவுக்கு மின்சக்தியை சேமிக்க வேண்டும் என்பது இதற்குக் காரணமாகும். மின்சக்தியை சேமிக்காது ஒரு நாடு, நிலையான பாதுகாப்பான ஒரு நாடாகா விளங்காது. அது மட்டுமன்றி நாட்டில் நிலையான ஒரு அபிவிருத்தியையும் அடைய முடியாது. ஆகையால் நாம் எப்பொழுதும் மின்சாரத்தைச் சேமிக்குமாறு கூறி வருகின்றோம்’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மின்சக்தித் துறையின் எதிர்காலத் திட்டம் பற்றி விளக்கமளிக்கும் போது அமைச்சர் ரணவக்க,

‘எதிர்காலத்தில் நாங்கள் எதிர்பார்க்கின்றோம், தாவரமூல சக்தி மூலவளங்களை அபிவிருத்தி செய்வதற்கு. இன்று நூற்றுக்கு ஐம்பது வீதமான சக்தி, தாவரமூல சக்தி வளங்களிலிருந்து கிடைக்கின்றது. குறிப்பாக காற்றுமூல சக்தி மற்றும் சூரிய சக்தி ஆகிய சக்தி மூலவளங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரம் 2020 ஆம் ஆண்டளவில் நூற்றுக்கு இருபது வீதத்தால் அதிகரிக்கும். அதே போன்று, நாங்கள் அதற்கிடையில் எதிர்பார்க்கின்றோம், அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதியளவில் மின்சார வசதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு. மின்சாரம் வீணாகுதலைக் குறைப்பதற்கும், மின்சார சேமிப்பை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. போக்குவரத்துத் துறை எரிபொருள் விநியோகத்தில் தங்கியிருக்கும் அளவைக் குறைப்பதற்கும், இந்த சிங்களப் புத்தாண்டிற்கு முன்னர் வாகனங்களுக்கான முதலாவது மின்னேற்றப் பிரிவு ஒன்றைத் தாபிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதே போன்று மின்சார சபையினதும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினதும் கடன் சுமைகளைக் குறைக்கும் வகையில் மின்சக்தி முறிகளை விநியோகிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கெளரவ ரனில் விக்ரமசிங்க அவர்கள், ஒரு நாட்டில் அறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், அந்த நாடு மின்சக்தித் தேவையில் தன்னிறைவுடையதாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு தன்னிறைவில்லாததாக இருந்தால் எந்த ஒரு அபிவிருத்தித் தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாது எனவும், அன்று மகாவலித் திட்டத்தினூடாக திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியது போன்று, அறிவை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமானால் மின்சாரம் அவசியமாகும் எனவும் தெரிவித்தார். இந்தத் தேவையை அறிந்து இவ்வாறான ஒரு திட்டத்தைத் தயாரித்த மின்வலு சக்தி அமைச்சர் கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

 இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பெருந்தோட்டக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதன் முதலிய அமைச்சர்களும், மின்வலு சக்தி அமைச்சு, நிதி திட்டமிடல் பொருளாதார விவகாரங்கள், சிறுவர் விவகாரங்கள் அமைச்சு, போக்குவரத்து அமைச்சு போன்ற அமைச்சுகளின் செயலாளர்களும், மாகாண சபை உறுப்பினர் நிசாந்த வர்ணசிங்க அடங்கலாக, இலங்கை மின்சார சபை, இலங்கை தனியார் மின்சாரக் கம்பனி, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required