மின்சக்தியைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதால் அரசியலை கேலியாக்கிக்கொள்ளத் தேவையில்லை. இது ஒரு குறுங்காலத்திற்கு மாத்திரமானதல்ல. இது நீண்டகாலம் தொட்டு நாட்டிற்கும் மக்களுக்கும் இருந்து வருகின்ற ஒரு தேவையாகும்.
12 0

Posted by  in Latest News

‘சிறிது சிறிதாக சேமிப்பது பெரும் சக்தியாக மாறலாம். ஒரு சிறு முயற்சியைக் கொண்டு பெருமளவான சக்தியை உற்பத்தி செய்யுங்கள். நாங்கள் அன்று 2011, 2012 ஆம் ஆண்டுகளில் மின்சார நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், வேண்டுகோள் ஒன்றை விடுத்தோம், ஒரு மின் விளக்கை அணையுங்கள் என்று. 60 மின் குமிழ்களை அணைத்தால் ஐம்பது இலட்சம் வீடுகளுக்கு, 300 மெ.வொ. மின்சாரம், அதாவது புத்தளம் அனல் மின்சக்தி உற்பத்தி நிலையத்தினது மின்க்திக் கொள்ளவுக்குச் சமனான மின்சாரம் சேமிப்பாகும். ஒறு சிறு முயற்சிக்கு கூட்டு சக்திகள் சேர்ந்தால், பெருமாளவான சக்தி உருவாகும். மின்சக்தியைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசியலைக் கேலியாக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது நீண்டகாலம் தொட்டு மக்களுக்கு இருந்து வருகின்ற ஒரு தேவை. இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, இலங்கை மின்சார சபை, இலங்கை மின்சார தனியார் கம்பனி, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, மின்வலு சக்தி அமைச்சு போன்ற நிறுவனங்களையும் அதே போன்று எதிர்காலத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் இணைத்துக்கொண்டு, மாபெரும் தேசிய முயற்சி ஒன்றாக ஆக்குவோம். இந்தப் பிள்ளைகளிடத்திலும், முழு மக்களிடத்திலும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம், இந்த தேசிய மாபெரும் முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடிகளாக ஆகுங்கள் என’ மின்வலு சக்தி அமைச்சர் கூறினார்.

மின்வலு சக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, லங்கா ட்ரான்ஸ்போமர் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து 2012 ஆம் ஆண்டு, மின்பிறப்பாக்கி மின்னுற்பத்தி நிலையம் என்ற எண்ணக்கருவின் கீழ் மின்சக்தியைப் பேணிப்பாதுகாக்கும் மனோபாவத்தை பாடசாலை மாணவர்களன் உள்ளங்களில் வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த மின்சக்தியைப் பேணிப்பாதுகாப்பது தொடர்பான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாடசாலைகளுக்கும் பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்ட வேளையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன் கீழ் நாட்டில் 24 பாடசாலைகளுக்கும் அவற்றின் மாணவ மாணவிகளுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரணவக்க,

‘2012 ஆம் ஆண்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டாலும், பரிசில்கள் வழங்கும் வைபவத்தை நிகழ்த்த முடியவில்லை. இது எமது அரசியல் கட்டமைப்பில் நிகழ்ந்த ஒரு வடுவும், குறைபாடும். ஒரு சில நிறுவனங்கள் கெடுதிகளை மேற்கொள்கின்றன, ஆனால் நல்லவற்றை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பதில்லை. மறந்துபோகவிருந்த இந்த நல்ல விடயத்தை மீண்டும் நினைவில் நிறுத்தி, எமது பிள்ளைகளுக்காக இந்தக் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்ற முன்வந்தமைக்கு, லங்கா ட்ரான்ஸ்போமர் நிறுவனத்திற்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்’ எனவும்,

‘இந்தப் பிரச்சினைகள் எமக்கு ஏற்பட்டது 2012 ஆம் ஆண்டிலாகும். புத்தளம் அனல் மின்சக்தி உற்பத்தி நிலையம் போன்ற மின்னுற்பத்தி நிலையங்கள் சரியான முறையில் இயங்கியிருந்தால், எமக்கு மின்சாரத்தை விநியோகிப்பதில் பிரச்சினை இருந்திருக்காது. 2012 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதி முதல் நீர் மின்னுற்பத்தி குறைந்து வந்தது. இதற்குக் காரணம் மழைகள் இல்லாமை. அதனால் பெரும் மின்சார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. அதற்கு பல பரிகாரங்கள் இருந்தன. அதில் ஒன்றுதான் மின்வெட்டு. எமது பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளில் இந்த மின்வெட்டு இன்றும் காணப்படுகின்றது. மின்சாரத்திற்கான தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்க முடியாது. ஆயினும், அந்த சந்தர்ப்பங்களில் மின்வெட்டுக்களை அமுல்படுத்தினால், அது பெரும் சமூகப் பிரச்சினையாக மாறும். அவ்வாறு மின்வெட்டுக்களை அமுல்படுத்தாவிட்டால், குறுகிய ஒரு காலப் பகுதிற்கு தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டும். அதற்கு பெருமளவான நிதி செலவாகும். அது 17,000 மில்லியன் போன்ற ஒரு பெரும் தொகை. அவ்வாறில்லாது போனால், மற்றுமொரு மாற்றுவழிதான் மின்சாரத்தைச் சேமிப்பது. அது சவால்நிறைந்த ஒரு விடயம். ஆதலால்தான் இன்று எதிர்காலத்திற்கான அபிவிருத்தி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கில் பங்குகொண்ட பாடசாலை மாணவர்களை தேசிய வீரர்கள் என்று கூறலாம். நாங்கள் அந்த நேரங்களில் கூறியது நீர்மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற முடியாது போனால், மின்பிறப்பாக்கிப் பொறித்தொகுதிகளிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என. இது தொடர்பில் சிலர் சந்தேகம் கொண்டனர், இது எவ்வாறு முடியும் என’ எனவும்,

‘இந்த நாட்டின் சில வியாபாரிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள், எப்போது மின்சார நெருக்கடி வரும் அப்போது, பிரயோசனமடைந்து தமது பக்கெற்றுக்களை நிரப்பி செல்வத்தைக் குவித்துக்கொள்வதற்கு. நாங்கள் பெருமைப்படுகின்றோம், அன்று எமது பாடசாலை மாணவர்கள் இந்தப் பிரச்சினையிலிருந்து நாட்டைப் பாதுகாத்தற்கு. நாங்கள் இன்று மிகவும் புதுமையான உலகிலேயே வாழுகின்றோம். மனிதன் ஆக்கபூர்வமானவன். இந்த ஆக்கபூர்வத்தில் முதலாவது அங்கம் மொழிகளும் தொடர்பாடல்களும். இதன் இரண்டாவது அங்கம் தான் மனிதன் தேவைகளை செயற்கையாகப் பெற்றுக்கொள்வது. மனிதன் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்கின்றான். இந்த உலகத்தில் முதலில் தானியங்களை வளர்த்த நாடுதான் இலங்கை. இது எமது மக்களுக்குக் கிடைத்த முக்கியமான ஆக்கபூர்வத் திறன். மூன்றாவது முக்கிய அங்கம் தான் பரிமாற்றல். இது மனிதனின் முக்கிய தேவை. ஆக்கபூர்வத்தின் மற்றொரு அங்கம் தான் சட்டம். இந்த ஆக்கபூர்வத்தின் மிக முக்கியமானது தான் மனித சக்திக்குப் பதிலாக மின்சக்தியைப் பயன்படுத்துதல். எமது நாடு இதன் நிமித்தம் பயன்படுத்தியது தேங்காய் எண்ணெய். ஏனைய நாடுகள் விலங்கு எண்ணெய்கள் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தின’ எனவும்,

‘இன்று எமக்கு அனைத்தையும் செய்ய வேண்டியிருப்பது மின்சாரத்தால். எண்ணெய், நிலக்கரி, எரிவாயு என்பன எளிதில் விரைவில் அழிந்துபோகக் கூடியவை. இன்னும் வேண்டுமானால் 04 தசாப்தங்களே நிலைத்திருக்கும். அதன் பின்னர் நாட்டிற்கு மின்சாரத்தை வழங்க பிரதியீட்டுச் சக்தி மூலங்கள் அவசியம். ஆகையால் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தாவரமூல சக்தி தொடர்பான ஒரு கொள்கையைப் பின்பற்றுவதற்கு திட்டமிட்டு வருகின்றது. இலங்கையில் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து கிடைப்பதைப் பார்க்கிலும் அதிகமானளவு வலு கிடைப்பது எரிவிறகுகளிலிருந்து. அது அபிவிருத்தியடையவில்லை என்பதற்கான அறிகுறியல்ல. நாங்கள் எமது உணவுக்காக பயிர்களை வளர்த்துக்கொள்வது போல் எமது சக்தித் தேவைக்கும் சக்தி வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். மின்சக்திக்கான இந்த வளர்ப்பு அடுத்து வரும் இரண்டு மூன்று தசாப்தங்களில் மிகவும் முக்கியமான ஒரு தொழிலாக மாறிவிடும். உலகில் மிக முக்கியமான விடயம்தான் வினைத்திறனூடாக அபிவிருத்தியை அடைந்துகொள்வது. நாங்கள் எப்பொழும் தேவை பற்றி சிந்தித்தோமே தவிர, மின்சக்தி முகாமைத்துவத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிக்கும் போது, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் எத்தனை மின்னுற்பத்தி நிலையங்கள்அவசியம் எனக் கணக்குப் பார்த்தோமே தவிர, மின்சாரத்தை சேமிப்பதற்கு நாம் சிந்திக்கவில்லை. இலங்கையில் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பது ஆண்டொன்றுக்கு 3% வீதத்திற்கும் 4% வீதத்திற்கும் இடைப்பட்ட அளவில். இந்த அளவான மின்சாரம் பாடசாலை மாணவர்கள் மின்சாரத்தைச் சேமிப்பதால் கிடைக்குமாயின், புதிதாக மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கத் தேவையில்லை. ஆகையால் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தோம், மின்சாரம் மட்டுமன்றி எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய பொருத்தமான பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் சேமிப்பு முயற்சியை மேற்கொள்வதற்கு’ எனவும்,

‘நாங்கள் இன்று எரிபொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளோம். நாங்கள் நினைத்தோம், குறைந்த அந்த விலைகளினால், மக்கள் அதற்காக செலவு செய்த தொகையை சேமிப்பார்கள் என. ஆனாலும் நிகழ்ந்தது விலை குறைந்ததே தவிர, மக்களின் பயணங்கள் குறையவில்லை. இது எங்களது நல்ல பழக்கமல்ல. எரிபொருட்களையும் நாம் சேமிக்க வேண்டும். எரிபொருள் இன்னும் அதிக காலம் நிலைத்திருக்கப் போவதில்லை. பங்காளதேசத்தில் எரிவாயு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றது. ஆகையால் தான் அந்த நாட்டு மக்கள் எரிவாயு அடுப்புகளைக் கூட அணைக்க முடியாத அளவுக்கு சோம்பரிகளாயிருக்கின்றனர். அரசாங்கத்திற்கு ஏற்படும் ஒரு பெரும் பிரச்சினைதான் எரிவாயுப் படிவுகள் இன்னும் சில வருடங்களில் இல்லாது போய்விடும். ஆனால், தற்பொழுது இந்த இலவசமாக வழங்குவதை நிறுத்தினால், அரசாங்கம் கவிழ்ந்துவிடும். பாகிஸ்தானில் இன்று 18 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. மின்சாரத்தை சேமிப்பதற்குத் தெரியாமை தான் அந்த நாடு அந்தளவு திவால்நிலைக்கு ஆளாகுவதற்குக் காரணம். ஆகையால் மின்சாரத்தை விநியோகிப்பது மட்டுமல்ல மின்சாரத்தை சேமிக்கவும் முயற்சிக்க வேண்டும். நாங்கள் மின்சாரத்தை சேமிக்கவில்லை என்றால் பங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலைக்கு எமது நாடும் தள்ளப்படலாம்’ எனவும் கூறினார்.

இந்த நிகழ்வில் 24 பாடசாலைகளின் ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் அடங்கலாக மின்வலு சக்தி அமைச்சினதும், இலங்கை மின்சார சபையினதும், இலங்கை தனியார் மின்சாரக் கம்பனியினதும், லங்கா ட்ரான்ஸ்போமர் நிறுவனத்தினதும் சிரேஷ்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

Leave a comment

* required