ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் அனுராதபுர மாவட்டத்திற்கு 100% மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்
10 0

Posted by  in Latest News

‘அனுதாரபுர மாவட்டத்தின் பின்தங்கிய கஷ்டப்பட்ட ஒவ்வொரு கிராமமும் உள்ளடங்கும் வகையில், இந்தச் சிங்களப் புத்தாண்டிற்கு முன்னர் முழு மாவட்டத்திற்கும் மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. எமக்கு முக்கியம் 100 நாட்களல்ல. 100 நாட்களினுள் செய்யக்கூடிய வேலைகள் 100 வேலைகளே. அந்த 100 வேலைகளில் நாடு முழுதிலும் வாழுகின்ற மக்களுக்கு  மின்சாரத்தை வழங்குவது முக்கியம்’ என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார். நேற்றைய தினம் மிகிந்தலை புனித பிரதேசத்திற்கு மின்பிறப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொடுத்த வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரணவக்க,

‘(CMEC)சிமெக் கம்பனியின் அனுசரணையில் இலங்கை மின்சார சபையின் மூலம் மிகிந்தலை புனித பிரதேசத்திற்கு மின்பிறப்பாக்கி ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அட்டமஸ்தான, தளதா மாளிகை போன்ற எமது ஏனைய புனித பிரதேசங்களுக்கும் இத்தகைய மின்பிறப்பாக்கிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் மின்சார நெருக்கடி எழும் நேரத்தில், இந்த மின்பிறப்பாக்கிகள் மூலம் இந்த சமய ஸ்தலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்’ எனவும்,

‘விஷேடமாக இந்த அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது அரசியலில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்காகும். அந்த அரசியல் மறுசீரமைப்பில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குதல், பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றுதல், நீதி, தேர்தல் நடவடிக்கைகள், அரசாங்க சேவை என்பவற்றுக்கு ஊழல் மோசடிகள் நீங்கிய வலிமையான ஆணைக்குழுக்களை நியமித்தல் என்பன போன்ற வாக்குறுதியளித்த விடயங்களை இந்த 100 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். ஒன்றுக்காக வேண்டி 100 நாட்களைக் கடத்தக்கூடாது. சனவரி 08 ஆம் திகதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவதற்கு சகல அரசியல் கட்சிகளும் கடமைப்பட்டுள்ளன’ எனவும்,

‘எல்லோரும் கேட்கின்றனர் 100 நாட்களுக்கு என்ன செய்தீர்கள் என. வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் எரிபொருள் விலைச் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கு நாம் விஷேடமாக குறிப்பிட வேண்டும். அதே போன்று சகல மின்சாரத் திட்டங்களையும் நிறைவு செய்து, தெற்காசியப் பிராந்தியத்தில் 24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்கும் ஒரேயொரு நாடாக இலங்கை மாற்றப்பட்டதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சினதும் இலங்கை மின்சார சபையினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required