Posted by in Latest News
கொழும்புத் துறைமுகத்திலிருந்து கொலண்ணாவ எண்ணெக் களஞ்சிய வளாகம் வரை எரிபொருட்களை எடுத்துச்செல்லும் சி.பி.எஸ்.ரீ.எல். நிறுவனத்திற்குச் சொந்தமான ஏறக்குறைய 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நிலகீழ் குழாய்மார்க்கம் இப்பொழுது கடுமையாக உடைந்துள்ளதால், அதிலிருந்து எண்ணெய்கள் கசிந்து, பல சந்தர்ப்பங்களில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.
இந்த நிலகீழ் எண்ணெய் குழாய்மார்க்கத்திலிருந்து எண்ணெய்கள் கசிந்து வீணாதல் மற்றும் இந்த எண்ணெய்க் குழாய்மார்க்கத்தின் பழுபார்ப்புப் பணிகள் என்பன தொடர்பில் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தனது விஷேட கவனத்தைச் செலுத்தியுள்ளார். இவரது அறிவுரைகளின் பிரகாரம், சி.பி.எஸ்.ரீ.எல். நிறுவனத்தின் தலைவர் திரு ரொஷான் குணவர்த்தன ஆலோசனையின் பேரில், இந்த நிறுவனத்தின் ஊழியர்களது நேரடி உதவியைக் கொண்டு, இந்த எண்ணெய்க் குழாய்மார்க்கத்தின் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், முதல் கட்டமாக இந்த எண்ணெய்க் குழாய்மார்க்கத்தின் ஆட்டுப்பெட்டித் தெருப் பகுதியிலுள்ள ஏறக்குறைய 100 மீற்றர் நீளமான பகுதியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய ஒரு குழாய்மார்க்கப் பகுதியை நிறுவி, இந்தக் குழாய்மார்க்கப் பகுதியை ஏற்கெனவிருக்கின்ற குழாய்மார்க்கத்துடன் இணைக்கும் பணிகள் மகவத்தைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டன.