Posted by in Latest News
‘2014 ஆம் ஆண்டு இ.மி.ச. விஷேட திடீர்சோதனைப் பிரிவினால் நாடு முழுதிலும் முன்னெடுக்கப்பட்ட திடீர்சோதனைகளின் பயனாக, அந்த ஆண்டில் களவில் மின்சாரத்தைப் பெற்றிருந்த 3199 நபர்களைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தியதால் ஈட்டிய மொத்த இலாபம் ரூ. 212,777,977.03 ரூபாவாகும் என இலங்கை மின்சார சபையின் விசேட திடீர்சோதனைப் பிரிவு குறிப்பிடுகின்றது. இதில் 191 மில்லியன் ரூபா (ரூ.191,076,906.60) இலங்கை மின்சார சபைக்கான நட்டமாகவும், 21 மில்லியன் ரூபா (ரூ. 21701,069.43) நீதிமன்றக் தண்டக் கட்டணங்களாகவும் அறவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மோசடியாக மின்சாரம் பெறப்பட்ட சம்பவங்களில் 2077 சம்பவங்கள் மாணிவாசிப்பை மாற்றிய மோசடிகள் எனவும், 1122 சம்பவங்கள் மின்கம்பிகளில் சட்டமுறையற்ற ரீதியில் வயர்களைத் தொடுத்து மின்சாரத்தைப் பெற்ற சம்வங்கள் எனவும் இனங்காணப்பட்டுள்ளன’ எனவும்,
‘மின்சார சபையின் விஷேட திடீர்சோதனைப் பிரிவின் மூலம் நாடு முழுவதையும் உள்ளடக்கி திடீர்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வரை இ.மி.ச. திடீர் சோதனைப் பிரிவு தனது செயற்பாடுகளை வலுப்படுத்தி தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் ஆதரவளிப்பதற்கு, மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் அறிவுரைகளின் பேரில் மின்வலு சக்தி அமைச்சுக்கு இயன்றுள்ளது’ எனவும்,
‘இன்று நாட்டின் 96% வீதமான மக்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் இயன்றுள்ளது. மக்களின் அடிப்படை உரிமையாகக் கருதி நாட்டின் அனைத்து மக்களுக்கும் மின்சார வசதிகளை வழங்குவது மின்வலு சக்தி அமைச்சின் நோக்கமாகும். இத்தகைய ஒரு நிலையில் சட்டமுறையற்ற ரீதியில் மோசடியாக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதால் இலங்கை மின்சார சபைக்கு பொருளாதார ரீதியில் அதிகளவான நட்டம் ஏற்படும்’ எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், பசம்பிக்க ரணவக்க அவர்கள், இந்நிலைமை தேசிய பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு மின்சார மாணிவாசிப்புக் கருவிகளை மோசடியாகப் பொருத்துதல், மின்கம்பிகளில் சட்டமுறையற்ற விதத்தில் வயர்களைத் தொடுத்து மின்சாரத்தைப் பெறுதல் போன்ற செயற்பாடுகளினால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய ஒரு நட்டம் ஏற்படுகின்றது எனச் சுட்டிக்காட்டிய மின்வலு சக்தி அமைச்சர், இவ்வாறு மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு ஒத்துழைக்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அத்தகைய ஏதாவது ஒரு மோசடி நடவடிக்கை நிகழுமாயின், அது பற்றி 2422259 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.