தொழில் ரீதியில் எவ்வாறான ஒருவராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஆக்கபூர்வமும், கலையாற்றலும் அதே போன்று அரசியல் ஞானமும் இருக்க வேண்டும்
10 0

Posted by  in Latest News

மனிதன் எந்த ஒரு தொழிலில் ஈடுபட்டாலும், தனது தொழில் திறமைகளுக்கு மேலதிகமாக ஆக்கபூர்வ ஆற்றலையும் கலையாற்றலையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார். IESL பொறியியல் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முழுநேரப் பொறியியல் பாடநெறியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு நாட்டின் அபிவிருத்திற்கு பெளதீக வளங்கள் மட்டுமன்றி மனித வளங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும், ஒரு நாட்டை முழுமையான ஒரு அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வதற்கும், நாட்டை சர்வதேச ரீதியில் முன்னேற்றம் அடையச் செய்வதற்கும் புதிய தொழில்நுட்ப அறிவு, ஞானம் தேவைப்படுவது போல், மனித வளமும் ஆக்கபூர்வமானதாகவும், கலையாற்றல் கொண்டதாகவும் இருப்பது அவசியம் எனவும், கடந்த காலங்களில் உயர் வர்க்கத்தினருக்கும், கொழும்பில் வாழ்ந்தவர்களுக்கும் மட்டுப்பட்டிருந்த அரசியல் மேடை, இன்று சகல மக்களுக்கும் தாராளமானதாக மாறியுள்ளது எனவும், தொழில்சார்ந்த அறிவுடைய இத்தகைய பொறியியலாளர்களும் கூட அரசியலில் பங்களிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க,

‘உண்மையில் இந்தப் பொறியியல் கல்லூரி இவ்வாறு காலத்திற்கேற்ற ஒரு பாடநெறியை ஏற்பாடு செய்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். நாட்டின் எதிர்கால சந்ததியினர், நாளைய எதிர்காலத்திற்குப் பொருத்தமான விதத்தில் தொழில்நுட்ப அறிவு வாய்ந்தவர்களாக மாறுவது நாட்டிற்கும் எமக்கும் ஒரு பெரும் பாக்கியமாகும். இளம் பொறியியலாளர்களின் வலிமையில் இலங்கை எதிர்காலத்தில் ஒளிமயமானதாக விளங்குவதைப் பார்ப்பதே அரசாங்கம் என்ற ரீதியில் எமது அனைவரதும் அபிலாஷையாகும்’ எனவும்,

நாம் இருப்பது புதிய ஒரு யுகத்தின் நிமித்தம் ஒரு சமூகப் பரிவர்த்தனையாக மாறிவருகின்றதும், அரசாங்கத்தினால் நல்லாட்சியை முன்னிட்டு புதிய கொள்கைகளும், தீர்மானங்களும் எடுக்கப்படுகின்றதுமான ஒரு யுகத்திலாகும். அதே போன்று இது இளைஞர், முதியவர்கள் அனைவருக்கும் தமது எதிர்கால வாழ்வுக்கு பல சிறப்புரிமைகள் கிடைக்கும் ஒரு யுகமாகும். இலங்கை தற்பொழுது மத்திய பொருளாதார வட்டத்திலிருந்து உயர் பொருளாதார வட்டத்தை நோக்கி நகர்கின்றது என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். இத்தகைய ஒரு பொருளாதாரக் கட்டமைப்பின் முன்னிலையில் பொறியியலாளர்களுக்குள்ள தேவை மிகவும் உயர்ந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையால் இத்தகைய ஒரு தொழிலில் ஈடுபடுவதனூடாக நாட்டின் அபிவிருத்தியின் பங்காளியாக மாறுவது மட்டுமன்றி, தனிப்பட்ட ரீதியில் தனது பொருளாதார நிலையையையும் சமூக அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வதற்கும் வாய்ப்புக் கிட்டும்’ எனவும்,

‘அதற்கு ஏற்ற விதத்தில் நாட்டிற்குப் பொருத்தமான முன்னேற்றகரமான ஒரு நிகழ்ச்சிநிரலுக்கும், அபிவிருத்தி ரீதியான ஒரு பொருளாதாரக் கட்டமைப்புக்கும் இந்தப் பொறியியல் தொழிலை நவீனப்படுத்த வேண்டும். ஆகையால், இத்தகைய ஒரு பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டமை காலத்திற்கு உகந்ததாகும்’ எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் IESL பொறியியல் கல்லூரியின் தலைவர் திரு எஸ்.பீ. விஜேகோன் மற்றும் IESL பொறியியல் கல்லூரியின் கல்வி சார்ந்த ஊழியர்களும், மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required