இலங்கை மின்சார தனியார் கம்பனியின் புதிய தலைவர் பந்துல சந்திரசேக்கர
29 0

Posted by  in Latest News

இலங்கை மின்சார தனியார் கம்பனியின் புதிய தலைவராக திரு பந்துல சந்திரசேக்கர நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூயில் கல்வி பயின்ற இவர், ஸ்ரீ ஜயவர்த்தனப்புரப் பல்கலைக்கழகத்தின் வர்த்தத் துறையில் பட்டம் பெற்ற ஒருவராவார். ஏறக்குறைய பதினைந்து வருட காலம் மின்சார சேவை விநியோகங்கள் தொடர்பான பல கருத்திட்டங்களில் சம்பந்தப்பட்டுப் பணியாற்றியுள்ள திரு சந்திரசேக்கர, இந்நாட்டு மற்றும் தெற்காசியப் பிராந்திய மின்சக்தி முறையியல் தொடர்பில் சிறந்த ஒரு பயிற்சியைப் பெற்று, ஆய்வுகளில் ஈடுபட்ட ஒரு ஆய்வாளராவார். இவர் மீளப்புதுப்பிக்கத்தகு மற்றும் கிராமிய மாற்றுவழி மின்சக்தி விநியோகச் சேவைகளில் விஷேட கவனத்தைச் செலுத்தி, கடந்த காலங்கள் முழுதிலும் மின்சார நுகர்வோரின் உரிமைகள் மற்றும் மின்சக்தித் துறையின் நல்லாட்சி என்பன தொடர்பில் முன்னின்று செயல்பட்டவராவார்.

சுற்றாடல் மற்றும் தொழில் உரிமைகள் ஆகிய விடயங்களில் பல பெரும்பான்மையான அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்தி, காத்திரமான முறையில் தொழிற்பட்டுள்ள இவர், தேசிய கல்விமான்கள் சபையின் ஏற்பாட்டாளராகவும் தற்பொழுது தொழிற்பட்டு வருகின்றார். சமூக, அரசியல் துறைகளில் பரந்த அனுபவத்தையுடைய இவர், எழுத்தாளர் ஒருவராகவும், அரசியல் பகுப்பாய்வாளர் ஒருவராகவும் விளங்குகின்றார்.

Leave a comment

* required