எரிபொருட்களின் விலைகள் 2015.01.21 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறைக்கப்படும்
23 0

Posted by  in Latest News

2015.01.21 ஆம் திகதி நள்ளிரவு முதல் செயல்வலுப் பெறும் வகையில், எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை நீக்குவதற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஆகியோர் அடங்லாக முழு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஏகமனதாகத் தீர்மானித்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

அதன் பிரகாரம் 2015.01.21 ஆம் திகதி நள்ளிரவு முதல் செயல்வலுப்பெறும் வகையில்,

ஒரு லீற்றர் ஒக்டன் பெற்றோலுக்கு புதிய விலை 117.00 ரூபா (33.00 ரூபா விலைச் சலுகை)

ஒரு லீற்றர் 95 ஒக்டன் பெற்றோலுக்கு புதிய விலை 128.00 ரூபா (30.00 ரூபா விலைச் சலுகை)

ஒரு லீற்றர் சாதாரண டீசலுக்கு புதிய விலை 95.00 ரூபா (விலைச் சலுகை 16.00 ரூபா)

ஒரு லீற்றர் சுப்பர் டீசலுக்கு புதிய விலை 110.00 ரூபா (23.00 ரூபா விலைச் சலுகை)

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு புதிய விலை 65.00 ரூபா (16.00 விலைச் சலுகை)

எதிர்காலத்தில் உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் ஏனைய சந்தைச் செயற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பொருத்தமான விதத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதியினதும், பிரதமரினதும், நிதி அமைச்சரினதும் அறிவுரைகளின் பிரகாரம் எரிபொருட்களுக்கு விரைவில் ஒரு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Leave a comment

* required