இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் சுப வேளையில் தமது பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
21 0

Posted by  in Latest News

மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக திரு எச்.எம்.பீ.சி. ஹேரத் நேற்று மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தொழில் அமைச்சினதும் மற்றும் கடற்றொழில் அமைச்சினதும் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றிய இவர், கடற்றொழில் அமைச்சினதும் தேசிய தொழிலாளர் கல்வி நிறுவகத்தினதும் முன்னாள் பணிப்பாளர் நாயகமாவார். இந்தியாவின் மதுரைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பட்டதாரி ஒருவரான திரு ஹேரத், ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்புப் பட்டத்தைப் பெற்றவருமாவார். தேசிய கொள்கைகள் திட்டமிடல் தொடர்பில் அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகத்தில் பயிற்சியையும், நிலையான அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலிய அட்லேண்ட் பல்கலைக்கழகத்தில் பயிற்சியையும் பெற்ற திரு ஹேரத், அரசாங்க சேவையில் 31 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ள ஒரு சிரேஷ்ட அலுவலராவார்.

சுப வேளையில் அமைச்சின் செயலாளர் என்ற தனது முதலாவது பதவியில் பணிகளை ஆரம்பித்த திரு எச்.எம்.பீ.சி. ஹேரத், சுமுகமாக நாட்டின் அபிவிருத்திற்கு மேற்கொள்ளக்கூடிய நியாயமான பணிகளை நோக்கி தான் தொழிற்படுவதற்கு ஆயத்தமாகவிருப்பதாக தனது சகோதர ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார். கொள்கைகளை மதிக்கும் அமைச்சர் ஒருவர் தனது அமைச்சுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராகவும், பணிப்பாளர் நாயகமாகவும் அந்த நிறுவனத்தில் 33 வருட கால சேவை அனுபவத்தையுடைய சிரேஷ்டப் பொறியியலாளர் ஒருவரான திரு ரன்ஜித் விக்ரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களினால் நியமிக்கப்பட்டார். இன்று காலை 8:20 மணி நேரமான சுபவேளையில் தனது பதவியில் பணிகளை ஆரம்பித்த புதிய தலைவர், தனது நிறுவனம் நாட்டின் அபிவிருத்திற்கு அளப்பெரிய பங்களிப்பைச் செய்வதாக தனது சகோதர ஊழியர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார். எனினும், பொது மக்கள் மத்தியில் அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் நிலவும் புரிந்துணர்வு அவ்வளவு தூரம் சாதாகமானதல்ல எனவும், ஆகையால் அந்த மனோபாவம் அவர்களின் உள்ளங்களிலிருந்து நீங்கும் வகையில் நாம் நியாயமான முறையில் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரின் கொள்கைகளையும், அரசாங்கத்தின் திட்டங்களையும் உச்சளவில் செயற்படுத்தும் வகையில் தான் தனது நிறுவனத்திற்கு முழு மனதுடன் வழிகாட்டுவதாகவும் அவர் மேலும் உறுதியளித்தார். மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் ஒருவராக தனது பட்டத்தைப் பெற்ற திரு விக்ரமசிங்க, 1979 ஆம் ஆண்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயிலுநர் பொறியியலாளர் ஒருவராக இணைந்தார். கருத்திட்டப் பொறியியலாளர் ஒருவராகவும், கருத்திட்ட முகாமையாளர் ஒருவராகவும் மற்றும் சிரேஷ்ட நிர்மாணப் பொறியியலாளர் ஒருவராகவும் பணியாற்றி, இவர் 1994 ஆம் ஆண்டில் பயங்கரவாதப் புலிகளினால் அழிக்கப்பட்ட எண்ணெய் குதங்களை மீளநிர்மாணிக்கும் கருத்திட்டத்திற்கும் பங்களித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு முதல் பிரதிப் பொது முகாமையாளராக (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) பதவியை வகித்த இவர், கட்டுநாயக்க விமான நிலையத்தினதும் மத்தள விமான நிலயத்தினதும் கருத்திட்டங்களுக்குப் பொறுப்பாகவிருந்து தனது பணிகளை சரிவர நிறைவேற்றியுள்ளார்.

Leave a comment

* required