Posted by in Latest News
இ.மி.ச. தலைவராக அனுர விஜேபால அவர்களும் உப தலைவராக நிகால் விக்ரமசூரிய அவர்களும் நியமிக்க்பபட்டனர்.
நேற்று, மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் அமைச்சின் செயலாளராக சத்தியப்பிரமாணம் செய்த, கலாநிதி சுரேன் பட்டகொட அவர்கள் சுப வேளையில் மின்வலு சக்தி அமைச்சின் செயலாளர் பதவியில் தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இந்த நிகழ்வின் போது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் மற்றும் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அவர்களும் கலந்துகொண்டனர்.
தனது பதவியில் பணிகளை ஆரம்பித்ததையடுத்து, தனது சகோதார ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய கலாநிதி சுரேன் பட்டகொட, மின்சக்தி விடயம் தொடர்பான பரந்த அறிவுடைய அமைச்சர் ஒருவரின் கீழ் தனது அரசாங்க சேவையில் அமைச்சின் செயலாளர் பதவியென்ற முதலாவது பதவியை வகிக்கக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை தான் பெற்ற ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திற்குத் தேவையான மின்சக்தித் துறையின் மதிப்பையும் பெறுமதியையும் தான் நன்கு அறிவதாகவும், இதற்கு முன்னர் திறைசேரியில் பணியாற்றிய காலத்தில் மின்சக்தி விடயத்திற்குத் தேவையான நிதிக் கொடுக்கல்வாங்கள் தொடர்பில் தனக்கு சிறந்த அறிவும் புரிந்துணர்வும் இருப்பதாகவும், கலாநிதி பட்டகொட மேலும் தெரிவித்தார். அத்துடன் முழுமொத்த மின்சக்தித் துறையையும், ஊழல் மற்றும் மோசடிகள் நீங்கிய, சரியான அரசாங்க செயல் இலக்கை நோக்கி அமைச்சர்கள் இருவருடனும், நிறுவனங்களின் ஊழியர்களுடனும் ஒன்றிணைந்து மிகவும் நட்பு ரீதியில் தனது பணிகளை மேற்கொள்வதற்கு தான் ஆயத்தமாகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக அனுர விஜேபால நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் 2010-2012 வரையான ஆண்டுகளில் இ.மி.ச. உப தலைவராகப் பணியாற்றிய இவர், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராவார். மின்சக்தித் துறை தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தனிப்பட்ட பல அனுபவங்களையுடைய இவர், இலங்கை நர்ட் நிறுவனத்தின் தலைவராகவும் 2013-2014 வரையான ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் உப தலைவராக, அண்மையில் அதன் பொது முகாமையாளராகப் பணியாற்றிய நிகால் விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையில் (இ.மி.ச.) 35 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தையுடைய திரு விக்ரமசூரிய, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர், பிரதிப் பொது முகாமையாளர், மேலதிகப் பொது முகாமையாளர் மற்றும் பொது முகாமையாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.