அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் இலங்கை மின்சார சபையினதும் (இ.மி.ச.) இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினதும் ஊழியர்களைச் சந்திக்கும் நிகழ்வு
20 0

Posted by  in Latest News

சுதந்திர தினத்தை முன்னிட்டு எரிபொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார தெரிவிக்கின்றார்.

மின்சாரம், எண்ணெய், எரிவாயு என்பவற்றுக்கு முறையான ஒரு விலைச் சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். கொமிஷ் தரகுப் பணங்களைப் பெற்ற யுகம் முடிந்து விட்டது – என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

யுதிய ஒரு யுகத்திற்கு அடித்தளமிட்ட நாம், மின்சக்தித் துறையை வினைத்திறன் வாய்ந்த, மக்கள் நேய நிறுவனங்கள் அடங்கிய ஒரு துறையாக மாற்றுவோம் என சம்பிக்க ரணவக்க உறுதியளித்தார். இ.மி.ச., இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அணுசக்தி அதிகார சபை, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, மற்றும் எண்ணெய் அகழ்வுக் கருத்திட்டங்கள் என்பவற்றை ஒன்றிணைத்து வரலாற்றில் முதல் தடவையாக மின்வலு சக்தி அமைச்சை நாம் வலுப்படுத்தியுள்ளோம். இதனை நாட்டின் நலனுக்காக பயன்படுத்துவது தனதும், ரங்கே பண்டார அமைச்சரினதும், பொதுமக்களின் நிதியில் தங்கியிருக்கின்ற ஒவ்வொரு ஊழியர்களினதும் கடமையும் பொறுப்பும் ஆகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டுகின்றார். விரைவில் மின்சாரத்திற்கும், பெற்றோலியத்திற்கும், எரிவாயுவுக்கும் முறையான ஒரு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் செய்த முக்கிய தவறு யாதெனில் மின்சக்தித் துறை போன்ற நாட்டின் பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் முக்கியமான பலனைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய இந்த அமைச்சை முன்னாள் ஜனாதிபதி அடங்கலாக ஒரு சில அமைச்சர்கள் பாராதீனப்படுத்தியமையாகும். இது பற்றி தான் பல சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்திய போதும் அதற்கு அவர் சற்றும் செவிமடுக்கவில்லை. அதனையடுத்து ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் ஆதரவளித்த முன்னைய அரசாங்கத்தை தோல்வியுறச் செய்வதற்கு தான் முன்வந்ததாகவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்தார்.

இன்றிலிருந்து மின்சக்தித் துறையில் கொமிஷ் தரகுப் பணங்களைப் பெற்ற யுகம் முடிந்து விட்டது. ஊழல் மோடிகாரர்களுக்குத் திறந்திருந்த மின்சார சபையினதும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினதும் சகல கதவுகளும் இன்றிலிருந்து மூடப்பட்டு விடும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுக் கூறினார். தான் ஊழியர்களிடமிருந்து எதிர்பார்ப்பது யாதெனில் அவர்கள் தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை உச்சளவில் நிறைவேற்றி நியாயமான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதாகும். தொழில் மட்டத்திலுள்ள நிறுவனங்களின் நிருவாகத்தில் மீண்டும் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும். இதன் பின்னர் எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் பொருளாதாரத்தை விழுங்கும் நிறுவனங்களாக அல்லாது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இ.மி.ச. மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கான விஜயத்தின் போது இவற்றின் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, தான் இந்த விடயத்திற்குப் புதிதானவன் என்றாலும்கூட, சம்பிக்க ரணவக்க போன்ற உரிய விடயம் தொடர்பான பரந்த அறிவுடைய ஒருவருடன் தனது முதலாவது அமைச்சுப் பதவியில் பணிகளை ஆரம்பிக்கக் கிடைத்தமையை தான் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். இருவரும் ஒன்றிணைந்து நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்கும், இந்த நிறுவனங்களுக்கு உச்சளவான பயன்களை அடையும் வகையில் வழிகாட்டுவதற்குத் தேவையான திட்டங்களையும் கொள்கைகளையும் ஆக்குவதாகவும், அதே நேரம் இந்த நோக்கத்திற்கு தமது காத்திரமான பங்களிப்பை நல்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தை நோக்கி தமது அமைச்சின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்களை மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாக இயங்கச்செய்வதற்கு தான் அர்ப்பணிப்புடன் தொழிற்படுவதாகவும், அதன் முதன்னிலைப் பணியாக இன்றிருக்கின்ற எரிபொருள் விலையை எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார அவர்கள் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்கள்.Leave a comment

* required