மின்வலு சக்தி அமைச்சர் கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
16 0

Posted by  in Latest News

கெளரவ பாலித்த ரங்கே பண்டார மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சராக தனது முதலாவது அமைச்சுப் பதவியில் பணிகளை ஆரம்பிக்கின்றார்.

மின்வலு சக்தி அமைச்சர் கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள், சுப வேளையில், ப்லவெர் ரோட், கொழும்பு 07 எனும் முகவரியில் அமைந்துள்ள பெற்றோலியத் துறை அமைச்சின் கட்டிடத்தில் தனது அமைச்சுப் பதவியில் பணிகளை ஆரம்பித்தார்.

புதிய ஒரு யுகம் ஆரம்பமாகும் இத்தருனத்தில் மின்சக்தித் துறையில் சம்பந்தப்படும் சகல நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, பொருளாதாரத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்குகின்ற மின்சக்தித் துறை பாதுகாத்துப் பேணப்படுவது உறுதியாகும் விதத்தில் நிலையான ஒரு அடிப்படையில் அதனை நிருவகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரணவக்க தெரிவித்தார்.

மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் ரணவக்க அவர்கள், மின்சக்தித் துறைக்கு புதிய ஒரு விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்தும் பொருட்டு, குறைந்த அளவில் மின்சாரத்தை நுகர்கின்ற பொது மக்களுக்கு குறைந்த விலைச் சூத்திரமும், அதிகளவில் மின்சாரத்தை நுகர்கின்றவர்களுக்கு அதற்கு ஏற்ற விதத்தில் விலைச் சூத்திரமும், பெற்றோலியத்திற்குப் பொருத்தமான ஒரு விலைச் சூத்திரமும் தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்கள்.

இது வரை காலமும் வெளித்தரப்பு வர்த்தகர்களின் கடுமளவில் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்த மின்சக்தித் துறையை அந்த நிலையிலிருந்து விடுவிக்கும் முகமாக ஒரு பெரும் போராட்டத்தை மேற்கொள்ள நேர்ந்தது எனவும், எதிர்காலத்தில் இத்தகைய தரப்பினர் இந்தத் துறையில் ஆக்கிரமிப்பு ரீதியான செல்வாக்கைச் செலுத்துவதற்கு எந்த விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை எனவும், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் உகந்த விதத்தில் இலஞ்சம், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் என்பன பற்றி ஆராய்ந்து, பொது மக்கள் வழங்கிய ஆணையை   மிகவும் சிறந்த விதத்தில் மதித்துப் பேணி எதிர்காலத்தில் அத்தகைய விடயங்கள் நிகழாதிருக்கும் வகையில் நடவடிக்கை எடு்ப்பதற்கு தான் சித்தமாகவிருப்பதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதன் பின்னர், அனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 எனும் முகவரியில் அமைந்துள்ள மின்வலு சக்தி அமைச்சின் கட்டிட வளாகத்தில், மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அவர்கள், நண்பகல் 12.05 மணிக்கு சுபவேளையில் தனது அமைச்சுப் பதவியில் பணிகளை ஆரம்பித்த நேரம், மோசடி நிறைந்த அரசியல் நிலை செல்வாக்குச் செலுத்தும் இந்த யுகத்தில், பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர் ஒருவரின் கீழ் ஒரு அமைச்சுப் பதிவியை வகிப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தான் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும், இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பவற்றிலிருந்து விடுபட்டு, கருமங்களை நிறைவேற்றும் போது கவனமாகத் தொழிற்பட்டு, நாட்டின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவதற்றுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

Leave a comment

* required