மின்சார உற்பத்தி செலவூ எந்தளவூ உயர்ந்தாலும் அச் சுமையை நுகர்வோர் மீது சுமத்த மாட்டோம்.
14 0

Posted by  in Latest News

இ.மி.ச நட்டத்தை எதிர்நோக்கும் நிலையில் இருந்து மீட்க ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

மின்வலு சக்தி அமைச்சர் வழக்கறிஞர் பவித்ரா வன்னி ஆரச்சி அவர்கள்
இ.மி.ச ஊழியர்களை சந்தித்த போது குறிப்பிட்டார்.

இ.மி.ச கடந்த ஆண்டில் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியது. அந்த நட்டம் 68 மில்லியன் தொகையை இந்த வருட முடிவினுள் எமக்கு இதை விடவூம் நட்டத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். மின்சார உற்பத்தி செலவூ அதிகரித்தல் வரட்சி போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து மீட்டு அதே போல திருட்டு தனமாக மின்சாரம் பெற்று கொள்ளலும் இதற்கு காரணம் என காட்ட வேண்டும். நட்டத்திற்கான காரணம் எவ்வாறாயினும் இ.மி.ச எதிர்நோக்கும் நட்டம் நுகர்வோரின் மீது சுமத்த மாட்டேன் என மின்வலு சக்தி அமைச்சர் வழக்கறிஞர் பவித்ரா வன்னி ஆரச்சி அவர்கள் குறிப்பிட்டார். அவர்கள் இக்கருத்தை குறிப்பிட்டது உத்தியோக்க+ர்வ கடமைகளை பொறுப்பேற்றதுடன் நேற்று (07) இலங்கை மின்சார சபை ஊழியர்களை சந்தித்த தருணத்தில் ஆகும்.
இங்கு கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்இ
இலங்கை மின்சார சபை என்பது அத்தியாவசிய பொது மக்கள் சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். பொது மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமான இ.மி.ச இலாபம் உழைக்கும் நிறுவனமாக மாறாது. எனினும் நட்டத்தை எதிர்நோக்காத நிலைக்கு கொண்டு வர வேண்டும். கடந்த வருத்தில் காணப்பட்ட வரட்சி எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மின்சார துறை பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டது. விசேடமாக இலங்கையில் விலை குறைந்த மின்சார வளம் தான் நீi;. எனினும் இது வரையில் நீர் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட நீர் மிகவூம் பற்றாக்குறை நிலையில் உள்ளது. அதனால் கட்டாயமாக நாம் தற்போது விலை குறைந்த மீள் புத்தாக்க சக்தி வளங்களை உபயோகிக்க வேண்டும். அதே போல அசாதாரமாக பாவிக்கப்படும் மின்சாரத்தை குறைத்து கொள்ள மின்சக்தி பாதுகாப்பு திட்டத்தை பின்பற்ற வேண்டும் என பொது மக்களுக்கு வலியூறுத்தினார்.
மேலும் பல கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்இ
பொது மக்களுக்கு தரமான தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை பெற்று கொடுத்தல் எமது கடமை ஆகும். அதற்காக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபை நட்டத்தை எதிர்நோக்காத நிலைக்கு கொண்டு வரவூம் பொது மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக மாற்றவூம் சபை ஊழியர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவூம் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மின்வலு சக்தி அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி.பிரதினாந்து அவர்கள்இ ஆலோசகர் கே.கே.வங்.டப்ளிவ்.பெரேரா அவர்கள்இ இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் நிஹால் விக்ரமசூரிய அவர்கள்இ இரத்தினபுரி மாகாண சபை தலைவர் காஞ்சன ஜயரத்ன அவர்கள் உள்ளிட்ட இலங்கை மின்சார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.