நாட்டிற்கு, பொது மக்களுக்கு, மின்சக்தி துறைக்கு நேர்மையான, வினைத்திறனான சேவையை நிறைவேற்ற கூடிய பரிசுத்த சொத்து எனக்கு சொந்தமானது.
01 0

Posted by  in Latest News

மின்சக்தி துறையில் எதிர்வரும் தீர்மானங்களின் போது, நாட்டிற்கும் பொது மக்களுக்கும் ஆகிய இரு தரப்பினர் தொடர்பாகவும் எனது கவனத்தை செலுத்துவேன்.

புதிய மின்வலு சக்தி அமைச்சராக இந்த அமைச்சின் உத்தியோகபூர்வ கடமை பொருட்பேற்ற பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பவித்ரா வன்னிஆரச்சி அவர்கள் குறிப்பிட்டார்

இதுவரை காலமும் இலக்கை நோக்கி பயணம் செய்த மின்வலு சக்தி அமைச்சு செயலுடன் மேலும் அதே போல பொது மக்களின் மின்சார தேவையை முறையாகவும் தொடர்ச்சியாகவும் நிறைவேற்றும் இலக்கை பூர்த்தி செய்ய நான் எதிர்பாரக்கின்றேன். அதே போல அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இது வரையிலும் எனக்கு வழங்கிய அனைத்து அமைச்சுகளையும் எந்த சிக்கலுக்கும் உள்ளாகாது நடத்தி செல்ல என்னால் முடிந்தது. அதே போல நெருக்கடி காணப்படுவதாக கூறப்படும் இந்த அமைச்சி கடமை பொறுப்புக்கள் நாட்டிற்கும் பொது மக்களுக்கும் , மின்சக்தி துறைக்கு நேர்மையான, வினைத்திறனான சேவையை நிறைவேற்ற கூடிய பரிசுத்த சொத்து எனக்கு சொந்தமானது என புதிய மின்வலு சக்தி அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆரச்சி அவர்கள் குறிப்பிட்டார். அவர்கள் இக்கருத்தை வெளியிட்டது இன்று (31) மின்வலு சக்தி அமைச்சில் உத்தியோகப்பூர்வ கடமைகளை பொறுப்பேற்ற போதாகும்.

புதிய மின்வலு சக்தி அமைச்சராக வழக்கறிஞர் பவித்ரா வன்னிஆரச்சி அவர்கள் கடந்த (20) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியபிரமாணம் வழங்கினார். இவர் பெல்மடுல்ல பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராகவும், உற்பத்தி மற்றும் விஞ்ஞான பிரதி அமைச்சராகவும் மற்றும் பின்னர் வடமேல் மாகாண ஆளுனராகவும் பதவி வகித்த சிரேஸ்ட அரசியல்வாதி திரு.தர்மதாஸ அவர்களின் மூத்த புதல்வி ஆவதுடன் அவர் தொழில்ரீதியில் வழக்கறிஞர் ஆவார்.கௌரவ பவித்ரா வன்னிஆரச்சி அவர்கள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினராக அரசியலில் நுழைந்தார் மற்றும் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். சுகாதார பிரதி அமைச்சர், சமூக சேவைகள் மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சராக நியமனம் பெற்றார். 2000 ஆம் ஆண்டு தொடக்கம் கௌரவ பவித்ரா வன்னிஆரச்சி அவர்கள் அமைச்சரவை திட்டம் அமுல்படுத்தல், வறுமை ஒழிப்பு மற்றும் சமூர்த்தி, இளைஞர் அலுவல்கள், தேசிய சொத்து, கலாச்சார அலுவல்கள் மற்றும் தொழினுட்ப ஆராய்ச்சி அமைச்சராகவூம் நாட்டில் பதவியேற்று வகித்தார்.கௌரவ பவித்ரா வன்னிஆரச்சி மகளிர் பிரிவு கட்சி தலைவராக இருந்த போது இலங்கை சுதந்திர கட்சி பிரதி செயலாளராகவும் கடமை வகித்தார்.

ஸ்ரீபாதஸ்தானாதிபதி சுவாமிகள் உள்ளிட்ட பல பௌத்த மத குருமார்கள் மத்தியில் கடமையை ஆரம்பித்து வருகை தந்தவர்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அவர்கள்…..,

மின்சக்தி துறையில் காணப்படும் நெருக்கடிக்கு பிரதான காரணம் உள்பத்தி அசலவு அதிகரிப்பாகும். இந்த நிலையை புரிந்த கொண்டு அதிகரிக்கும் விலையை மின் கட்டணத்தின் ஊடாக பொது மக்களுக்கு சுமையை வழங்காது மின்சக்தி துறையில் நெருக்கடியை நீக்க வேண்டும். அதற்காக சிக்கல்களை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அதற்காகா தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விசேடமாக இதுவரையிலும் 94%மாக காணப்படும் இலங்கையின் மின்சார வசதி இவ்வருத்தினுள் 100% மாக உயர்த்தி முழு நாட்டையும் ஒளியேற்றி சவாலை வெற்றி கொள்ள பிரதி அமைச்சர், மின்வலு சக்தி அமைச்சு உள்ளிட்ட துணை நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் எதிர் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ அவர்கள், மின்வலு சக்தி பிரதி அமைச்சர் ப்றேமலால் ஜயசேகர அவர்கள், சப்ரகமுவ மாகாண சபை தலைவர் திரு.காஞ்சன ஜயரத்ன அவர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் திரு. லக்ஸ்மன் உலுகல்ல அவர்கள், மின்வலு சக்தி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.சி.ப்ரதினாந்து அவர்கள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் செயலாளர் திரு.அனுர சிறிவர்தன் அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required