“புவியை காக்க பொருளாதார அபிவிருத்தியை கட்டுபடுத்த வேண்டும்”
09 0

Posted by  in Latest News

மிஹிகத ஹோராவை தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு நடைமுறைப்படுத்திஇ இ.மி.ச. ரூ.8 பில்லியனை மீதப்படுத்தினாலும்இ அதன் மூலம் பொருதாரத்திற்கு ஏற்படும் நட்டம் ரூ.80 பில்லியன் தொகையாகும்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.
முழு உலகிலும் சூழல் நிலை மிகம் மோசமான நிலையில் மாற்றம் அடைந்து வருகின்றது. மனிதர்கள் பிரதான சகல உயிரினங்களும் அதில் பாதிக்கபடுவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள் குறிப்பிட்டார். நேற்று மாலை லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்ற மிஹிகத ஹோராவ 2013 ஆம் ஆண்டு மாநாட்டில் பேசிய போது அமைச்சர் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டார்.
எமது மக்கள் தொடர்ச்சியாக மிஹிகத ஹோராவ ஒரு வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தினார்களே ஆனால் அதன் ஊடாக இ.மி.சபைக்கு மீதமடையும் தொகை ரூ.8 பில்லியன் ஆகும். அந்த மணித்தியால பொருளாதாரத்திற்கு அடையும் நட்டம் ரூ. 80 பில்லியன் ஆகும். அதாவது நாட்டின் மதிப்பிடப்பட்ட தேசிய உற்பத்தியில் 1மூ என அமைச்சர் ரணவக்க அவர்கள் குறிப்பிட்டர்.
இந்த சகல நிலைமையிலும் உயிரினங்களின் வாழ்க்கை நடைமுறையை உறுதிபடுத்தும் எமது பூமியை பாதுகாக்க நாம் நமது பொருளாதார அபிவிருத்தியை கட்டுபடுத்த வேண்டும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். போசில எரிபொருள் இல்லாத 02இ 03 தசாப்தங்களில் உலகை எதிர் கொள்ள இப்போது இருந்தே பதிலீடுகளான பசுமையான தொழினுட்பம்இ மீள் புத்தாக்க மின்சக்தி மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித அபிவிருத்திஇ சமூக பொருளாதார அபிவிருத்திஇ கொள்கைகள் அதன் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் ஆராய உலகின் 152 நாடுகளில் மிஹிகத ஹோராவ பாரிய தகவல் அனுப்பப்பட்டு வருகின்றது. அதனை நடைமுறைப்படுத்தஇ உண்மையாக்க மற்றும் தொடர்ச்சியாக நடத்தி செல்ல நாளைய உலகை காக்க நாம் மேற் கொள்ளும் சிறிய முயற்சி என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

2013 ஆம் ஆண்டில் மிஹிகத ஹோராவ கொண்டாட்டம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி இரவு 8.30 தொடக்கம் 9.30 வரையான காலப் பகுதியில் நடத்த தீர்மானிக்கப்ட்டடு உள்ளது.
இந்நிகழ்வில் மிஹிகத ஹோராவின் அமைப்பாளர் என்சி ரிட்லிஇ இயற்கை வளங்கள் தொடர்பாக அமைச்சர் அனுர பிரியதர்ஸன அவர்கள்இ மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலஇ மிஹிகத ஹோராவின் இலங்கை பிரதி நிதி திரு. அப்துல் உவைஸ் ஆகியோர் மற்றும் சுற்றாடல்இ வியாபார மற்றும் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.