16 0

Posted by  in Latest News

• மின்சக்தி பாதுகாப்பில் ஈடுபடுவது நடைமுறை தேவைப்பாடாகும்.
• இயற்கை நிலையை கட்டுபடுத்த வாய்ப்பு இல்லை எனினும்இ கட்டுபடுத்த கூடிய சகல துறையையும் கட்டுபடுத்த நடவடிக்கை.

இற்றை வரையில் இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகும் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினை ஆவது மின்சக்தி நெருக்கடி ஆகும். இதற்காக காணப்படும் ஒரே பதிலீடு வினைத்திறனாகவும் மற்றும் சிக்கனமாகவும் மின்சக்தியை பாவித்தலாகும். இந்த நிலையின் காரணமாக இலங்கை மின்சார நுகர்வோர் மின்சக்தி பாதுகாப்பிற்காக ஈடுபடுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் நாளைக்காக இன்று மின்சக்தி பாதுகாப்பு தேசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீடு மின்சார பாவனையாளர்களின் அர்ப்பணிப்பில் வெற்றிகரமாக இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தது. அதற்காக மின்சார நுகர்வோர் 21 இலட்சம் பேர் பங்குபற்றி 91.8 கிகாவோட் மணித்தியால மின்சக்தி தேசிய மின்சக்தி முறைமைக்கு மீதமானதுடன் அதன் நிதி பெறுமதி ரூ.438 மில்லின் ஆகும்.
தற்போது நடைமுறையில் காணப்படும் மற்றும் எதிர்வரும் காலங்களில் ஏற்படவிருக்கும் காலநிலை பாதிப்புகளால் நீர் மின் உற்பத்தி அசாதாரண நிலைக்கு செல்லும். இந்த அசாதாரண நிலை காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளது. அன்று வைரயில் மின் சக்தி தேவை அன்றாடம் 30-35 மணித்தியாலம் கிகா வோட் தேவைப்படுவதுடன் அதன் மூலம் பெறப்படும் மின்சக்தி 04 மணித்தியால கிகா வோட் ஆகும். அது நீண்ட கால பலனல்ல. அதற்காக பதலீடு உபயோகிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரு தசாப்த ஆண்டுகளில் செப்தெம்பர் வரை கிடைக்க பெற்றுள்ள நீர் மின் பங்களிப்பில்இ 2012 ஆம் அண்டிலேயே மிகவும் குறைந்த பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. அது 1228 மணித்தியால கிகா வோட் ஆகும். இவை அனைத்தையும் கருதி நாம் மிகவும் கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க அவர்கள்…….
எமது நாட்டின் முழு மின்சார நுகர்வோர் 50 இலட்சம் ஆகும். ஆதில் 21 இலட்ச நுகர்வோர் மின் சக்தி பாதுகாப்பு வேலைதிட்டத்தின் முதற் கட்டத்தில் பங்களிப்பு செய்தமையால் 91.8 கிகா வோட் மணித்தியாலங்கள் மீதப்படுத்த முடிந்தது. ஒரு வருட காலத்திற்கு இவ்வாறு மின் சக்தி பாதுகாப்பில் ஈடுபட்டால் விக்டோரியா மின்நிலையத்தில் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் 360 கிகா வோட் மணித்தியாலங்கள் மீதப்படுத்த முடியும். மின் குமிழ்களை அணைப்பதென்றால் எதற்கு அரசாங்கம் மின்குமிழை அணைப்பதென்றால் எதற்கு அமைச்சர் என பொது மக்கள் சிரிக்கின்றனர். எனினும் இது மின்குமிழை அணைக்கும் செயற்பாடல்ல. அநாவசியமான மின்சார பாவனையை தவிர்க்கும் வழிமுறையாகும். முpன்சக்தியை சிக்கனமாக பாவிக்கும் செயலாகும். இதன் மூலம் தமது மின்சார கட்டணமும் குறையூம். இவ்வாறான மின்சக்தி நெருக்கடி நம் நாட்டில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் உள்ளது. எமது அயல் நாடான இந்தியாவிலும் மின்சார தட்டுபாடு காரணமாக பல மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு செய்யப்டுகின்றது. இது வரையில் மின்சக்தி பாதுகாப்பிற்காக 2300 பாடசாலைகள் பங்கு கொண்டுள்ளன. நாட்டின் சகல மக்களும் இதற்காக ஒன்று கூடினால்இ இரவு 6.30 – 9.30 வரையான காலப் பகுதியில் தமது வீட்டின் ஒரு மின்குமிழையேனும் அணைத்து இதில் பங்களிப்பு செய்தால் அந்தவொரு சவாலுக்கும் முகங் கொடுத்து தொடர்ச்சியான மின்சாரத்தை பெற்று கொடுக்க முடியும் என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் தலைவர் டாக்டர் விமலதர்ம அபேவிக்ரமஇ இலங்கை நிலைபெறு தகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கித்சிறி திசாநாயக்கஇ மின்வலு சக்தி அமைச்சின் வேலை பார்க்கும் செயலாளர் திரு.எம்.ஐ.எம்.ரபீக் அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.