Posted by in Latest News
யாழ்ப்பாண தீபகற்பம் மின்சக்தி முறைமைக்கு இணைப்பு
வடக்கு – தெற்கு ஒரே மின்சக்தி வலையமைப்பில் தொடர்பு
கிளிநொச்சி க்றிட் உபநிலையம் ஜனாதிபதி கரங்களால் சக்தி அளிக்கப்பட்டது.
25 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாண தீபகற்பத்தை தேசிய மின்சக்தி முறைமைக்கு இணைக்கும் நடவடிக்கை இன்று மு.ப 10.45 மணி சுப நேரத்தில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கரங்களால் நிகழ்த்தப்பட்டது. வவூனியா தொடக்கம் கிளிநொச்சி வரையிலான விஸ்தரிக்கப்பட்ட 132 கிலோ வோட் மின் செலுத்துகை மார்க்கம் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட க்றிட் உப நிலையம் ஊடாக சக்தியூட்டல் அவரின் தலைமையில் இடம் பெற்றது. 238 கம்பங்கள் உடனான இம் மின் செலுத்துகை முறைமையை சக்தியூட்டல்இ வவூனியா – யாழ்ப்பாண யூ9 மார்க்கத்தில் கிளிநொச்சி நகரிற்கு அருகெ நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி க்றிட் உபநிலையத்தில் இடம் பெற்றது.
25 வருடங்களின் பின்னர் இன்று முதல் வடக்கு தெற்கு ஒரே மின்சக்தி முறைமையில் தொடர்புபடுத்தல் கிளிநொச்சி க்றிட் உபநிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ஓடும் 33 கிலோ வோட் சீக்ரகாமி அதியூயர் மின் செலுத்துகை மார்க்கத்தை பயன்படுத்தி ஆகும். இத்திட்டத்திற்காக சலுகை வட்டி விகித கடன் அடிப்படையில் நிதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JICA) வழங்கப்பட்டது. பெற்று கொள்ளப்பட்ட கடன் தொகை ரூ.3200 மில்லியன் ஆகும். இத் திட்டத்தின் இரண்டாம் கட்டமான கிளிநொச்சி தொடக்கம் சுண்ணாகம் வரையிலான 132 கிலோ வோட் அதியூயர் மின் செலுத்துகை மார்க்கம் நிறுவப்பட்டு உள்ளது. இது வரையில் அதன் வேலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிடுகின்றது.
யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு இன்று முதல் தேசிய மின் சக்தி முறைமையில் தொடர்புபடுத்தல் ஊடாக யாழ்ப்பாணத்தில் வாழ் 121இ000 மின்சார நுகர்வோர் பலனடைவர். எதிர்வரும் ஜனவரியில் நிறைவூ பெறும் யாழ்ப்பாணத்தின் 24 மெகா வோட் அணல் மின்நிலையம் மூலம் யாழ்ப்பாணத்தில் மின்சக்தி மேலும் வலுப்படுத்தப்படும் எனவூம் இலங்கை மின்சார சபை குறிப்பிடுகின்றது. இதனால் நிகழ்கால நட்டமான் ரூ.2800 மில்லியன் தொகை ரூ.1500 மில்லியன் தொகையாக குறைவடையூம் எனவூம் இலங்கை மின்சார சபை குறிப்பிடுகின்றது.
இன்று முற்பகல் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கௌரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ அவர்கள், கௌரவ மின்வலு சக்தி பிரதி அமைச்சர் ப்றேமலால் ஜயசேகர அவர்கள்இ சிறு கைத்தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள்இ நாமல் ராஜபக்ஸ அவர்கள் ஆகிய அமைச்சர்கள் உட்பட இலங்கை மின்சார சபையின் தலைவர் டாக்டர் விமலதர்ம அபேவிக்ரம அவர்கள்இ பொது முகாமையாளர் திரு.நிஹால் விக்ரம சூரிய அவர்கள்இ இ.மி.ச. மேலதிக பொது முகாமையாளர் (திட்டம்) திரு.ஸவி ப்ரனாந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.